பக்கம்:சைவமும் தமிழும்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சைவ சமய விளக்கு னெறியைச் சிறப்புவகையான் உணர்த்தி, மெய்ந்நெறியிலே கொண்டு செலுத்தும். சிவாக மத்தால் பெறப்படுவதாய நெறி சைவம் எனப் படும். இந்நெறியில் சிவாகமத்தின் வழியமைந்த நெறி நான்கு. இவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று வழங்கப்பெறும். சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கக் தர்தமார்க் கம்என்றுஞ் சங்கரனை யடையும் நன்மார்க்கம் கால் அவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென கவிற்றுவதுஞ் செய்வர்." என்ற சித்தியார் பாடலால் இதனை அறியலாம். சன் மார்க்கத்தை நன்னெறி என்றும், சகமார்க்கத்தைத் தோழமைநெறி யென்றும், சற்புத்திர மார்க்கத்தைப் புத்திர நெறி (மகன்மைநெறி) என்றும், தாதமார்க்கத்தைத் தொண்டு நெறி என்றும் கூறுவர். சரியை முதலிய மூன்றும் ஞானத்தை அடைவிக்கும். முத்தியாகிய பெரும் பயனுக்கு ஞானம் ஒன்றே வாயிலாகும். ஏனைய பலவும் ஞானத்தை அடைவதற்கு வழியேயன்றி நேரே வாயி லாவன அல்ல என்பதை அறிவாயாக. வேள்வி, தானம், பிற கருமங்கள், செபம், தீக்கை முதலிய எவையாயினும் அவையெல்லாம் ஞானத்தைத் தந்து, பின்னர் அதன்மூலம் முத்தியை நல்குமன்றி, அவை நேராக முத்தியைத் தருவ 8. சித்தியார்.8-18 4. சன்மார்க்கத்திற்கு மணிவாசகப் பெருமானையும், சக மார்க்கத்திற்கு சுந்தர மூர்த்தி அடிகளையும், சற்புத்திர மார்க்கத்திற்கு ஞானசம்பந்தரையும்,திாதமார்க்கத்திற்கு திருநாவுக்கரசரையும் எடுத்துக்காட்டுகளாகக் கொன்வர் சைவநெறி யொழுகும் பெரியார்கள். 5. வைணவத்தில் கருமயோகம் ஞானயோகம் என்பவை: பக்தியோகத்தை விளைவிப்பது போல .