பக்கம்:சைவமும் தமிழும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 2.3% தில்லை. ஞானம் மும்மலங்களையும் அகற்றி உயிரைத் துய்மைப்படுத்தும்; பின்னர் இயல்பாகவே தூயவனும், இன்பவடிவினனுமாய இறைவனை அடைவிக்கும்; துன்ப மற்ற-எல்லையில்லாத-அவனது பேரின் பத்தில் திளைத் திருக்கச் செய்யும். மேற்கூறியவற்றால், படிமுறையாகச் சென்று சைவத்தை அடைந்து அதன் கண் உள்ள நால்வகை நெறி களில் நிற்றலே உயிர் மும்மலங்களினின்றும் நீங்கி இன்புறு வதற்கு வழியாகும் என்பதைக் கருத்தில் இருத்துக. இதனை, - புறச் சமய நெறிகின்றும் அகச்சமயம் புகுந்தும் புகல்மிருதி வழியுழன்றும் புகலும் ஆச்சிரம அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர்; இதிற்சரியை கிரியா யோகம் செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்." என்ற சித்தியாரின் திருவிருத்தத்தால் இனிது உணரலாகும். மேலும், சரியை முதலிய மூன்றும் ஞானத்தின் வளர்ச்சி திலைகளே என்ற பேருண்மையை, விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் கான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே." என்ற தாயுமான அடிகளின் திருவாக்காலும் ஒருவாறு உணர்ந்து தெளியலாம். T:ெ 7. தா. பா. பராபரக்கண்ணி.157