பக்கம்:சைவமும் தமிழும்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சைவ சமய விளக்கு இவ்விடத்தில் இன்னொரு செய்தியையும் நீ அறிந்து தெளிதல் வேண்டும். முத்தி, மோட்சம், வீடு இச்சொற்கள் ஒரே பொருளைத்தான் குறிக்கும். இந்த நிலைக்கு மறு தலையான நிலை பந்தம் அல்லது கட்டு அல்லது தளை ஆகும். பந்தம் என்பது யாது? அஞ்ஞானத்தால் உயிர்கள் தமது அறிவு விழைவு செயல்கள் (ஞானேச்சாக்கிரியைகள்) முற்றிலும் செயற்படாமல் அல்லது நன்கு செயற்படாமல் கட்டுண்டு நிற்பதே பந்தம் என்பது. அந்தக் கட்டினின்றும் விடுபடுதலே வீடு அல்லது மோட்சம்-முத்தி. ஞானம் வாராதவரையில் அஞ்ஞானம் நீங்காது; அதனால் கட்டும் நீங்காது. எனவே, ஞானம் ஏற்படாதவரையில் முத்தியும் கிடைக்கமாட்டாது என்பது தெளிவு. இதனை மேலும் விளக்குவது இன்றியமையாததாகின்றது. அஞ்ஞானம் இருள் போன்றது; ஞானம் ஒளிபோன்றது. ஒளி வந்தாலன்றி இருள் நீங்காதன்றோ? அதுபோல ஞானம் வந்தாலன்றி அஞ்ஞானம் நீங்காது, ஒளி வருங்கால் இருள் தானே நீங்கிவிடுதல் போல, ஞானம் வருங்கால் அஞ்ஞானம் தானே நீங்கும்; முத்தியும் எளிதில் கைகூடும். ஆகவே, ஞானம் தவிர வேறெதனாலும் முத்தியை அடைதல் இயலாது என்பதை உணர்ந்து தெளிக. இதனை, "ஞானத்தால் வீடு'என்றே நான்மறைகள் புராணம் கல்ல.ஆ கமம்சொல்ல அல்லவாம்’ என்னும் ஊனத்தார் என்கடவர்: அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர்மெய்ஞ் ஞானத்தான் ஆணத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள்போல் அஞ்ஞானம்விட பக்தம் அறும்; முத்தி ஆகும் " என்ற சித்தியாரின் செய்யுட்பகுதியாலும் தெளிவு பெறலாம். இங்ங்னமே தாயுமான அடிகளும், - 8. சித்தி .8-27.