பக்கம்:சைவமும் தமிழும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 சைவ சமய விளக்கு தானம் தவம்தருமஞ் சந்ததமும் செய்வர், சிவ ஞானக் தனை அணைய கல்லோள் பராபரமே." என்ற மற்றோர் கண்ணியாலும் அரண் செய்வதைக் கண்டு தெளிக. மேற்கூறியவை யாவும் ஞானத்திற்கு வாயிலாய் அமைந்து ஞானத்தைத் தோற்றுவித்து, அதன் பின்னர் முத்தியை நல்கும் என்பதே கருதிதாதல் அறிக. அன்பன், கார்த்திகேயன். 3ア அன்பு நிறைந்த கண்ணுதல்ப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. தீ எழுதிய சென்ற கடிதத்தில் ஞானம் வருவதற்குரிய வழியை விளக்குமாறு கேட்டிருந்தாய். அதனை ஈண்டு விளக்குவேன். ஞானம் வருவதற்கு முதற் கண் அந்த ஞானத்தைப் பெறுதலில் வேட்கை-அவா.-உண்டதால் வேண்டும். பசி யற்றவனுக்கு உணவு பயன் தராது; நீர் வேட்கை இல்லாத வனுக்கு நீர் பயன் தருவதாகாது. இங்ங்ணமே ஞான வேட்கை இல்லாதவனுக்கு-ஞானத்தை அவாவி நிற்காத வனுக்கு-ஞானம் பயன் படாது. ஆகவே, ஞானம் வரு வதற்கு முதற்கண் அதனைப் பெறுவோனிடத்தில் அது பற்றிய வேட்கை உண்டாதல் வேண்டும், 12. இடி, பராபரக்கண்ணி-158