பக்கம்:சைவமும் தமிழும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 28莎 ஆணவமலத்தைப்பற்றி முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட் டேணன்றோ? அதனை ஈண்டு நினைவுகூர்க. செம்பினிற் களிம்பு போல உயிருடன் அநாதியே கலந்திருக்கும். இம் மலம் ஞானத்தில் வேட்கை புண்டாகாதபடி உயிர்களின் அறிவைத் தடுத்து வைத்திருக்கும். இந்த ஆணவ மலம் என்றும் அழிவதில்லை என்பதையும் அறிவாய். ஆயினும், அது சடமாதலால், உயிர்களின் அறிவைப் பிணித்துவைத் திருக்கும் அதனது ஆற்றல் அதனது மறுதலைப் பொருளின் ஆற்றலால் நாளடைவில் மெலிவடைந்து, பிணிக்கும் நிலை யி னின்று நீங்குவதாகும். இந்நிலையே மலபரி பாகம்" என்று வழங்கப்பெறுவது. சித்துப் பொருளின் ஆற்றல் மெலிவடையாதிருத்தலையும் சடப்பொருளின் ஆற்றல் மெலிவடைவதையும் நீ அறிவாய். ஆணவமலம் இங்ங்ணம் பரிபாகமாதற் பொருட்டே இறைவன் அதற்கு மறுதலைப் பொருள்களாகிய கன்மம். மாயை என்பவற்றை உயிர்களுக்குக் கூட்டி பிறப்பிறப்பு களில் சென்று கன்மங்களை ஈட்டி அவற்றின் பயனாக இன்பதுன்பங்களை நுகரச் செய்கின்றான். இதனால்மறைக் கும் தன்மையுடைய ஆணவமலத்தின் ஆற்றல் சிறிது சிறி தாகத் தேய்கின்றது; உயிர்களின் அறிவும் சிறிது சிறிதாக விளக்கமும் பெற்று வருகின்றது. ஆணவமலத்தின் ஆற்றல் மெலிவடைதலாகிய மலபரிபாகம் வந்தால், இருவினை யொப்புத் தோன்றும். - - இந்த இருவினை யொப்பு’ என்பது என்ன? என்பதை சண்டு விளக்குவது இன்றியமையாத தாகின்றது. ஒருவன் தான் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறு படாதிருப்பதே இது. அஃதாவது இன்பத்தில் விருப்பமும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது இரண்டையும் சம மாக நுகரும் நிலை என்று விளக்கலாம். சேக்கிழார். பெருமான் சிவனடியார் மன நிலையை.