பக்கம்:சைவமும் தமிழும்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡器翁 ஐசவ சமய விளக்கு கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்: என்று விளக்குவார். தாயுமான அடிகளும், "ஒடும் இருகிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்' என்று சுட்டிக் காட்டுவர். இந்த இருவினையொப்பு வாய்த்தபிறகு சத்தி போதம் உண்டாகும். இந்த சத்தி நிபாதம் என்பது என்ன? கூறு வேன்; திரோதானமாய் நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனது சக்தி மலபரிபாகம் உற்ற நிலையில் அருட் சக்தியாக மாறி ஆன்மாவிடத்துப் பதிதலே “சத்தி நியாதம் என்பது, நிபாதம், வீழ்ச்சி இத்தி, பதிதல்" என்று சொல்லாமல் சக்தி வீழ்தல்’ என்க் கூறியதன் கருத்துதான் யாது? ஒர் அவையிடை திடீரென்று ஒரு கல் விழுமாயின், அங்குள்ளாருக்கு ஒர் அதிர்ச்சியை உண்டாக் குமன்றோ? அங்ங்ணமே, திரோதன சக்தி அருட் சக்தி யாகப் பதியும்பொழுது அப்பதிவு ஆன்மாவிற்கு உலகி யலில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கும். இதுபற்றியே இந் நிலை சத்தி நிபாதம் என வழங்கப்பெற்றது என்பதை அறிக. உலகியலில் உயிர்கள் தீயன செய்யாது நல்லன. செய்யக் கருதுதல் சத்தி நிபாதம்வழி நிகழ்வதேயாகும் என்பதையும் தெளிக. - அரசன் ஆணைக்கு அஞ்சியேனும், தம் சொந்த நலன் கருதியேனும் செய்யும் நல்வினைகள் மனத்தொடு பொருந்தாமையின் அது மல சக்தியின் காரியம் ஆவதே பன்றிச் சத்தி நிபாதத்தால் ஆவதன்று. அன்பும் அருளும் கற்றிச் செய்யும் நல்வினைகள் யாவும் சத்தி நிபா தத்தால் ஆவனவாகும். ஆயினும், கடவுட் கொள்கையின்றிச் செய்யப்படுமாயின், அவை பிறவி நீங்கும் வழியாகா. 13. பெரி. புரா. திருக்கூட்டச் சிறப்பு-சி 14. தா.பா. பராபரக்கண்ணி-18