பக்கம்:சைவமும் தமிழும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 28? ஆகவே, அவையும் மல சக்தியின் காரியமாகவே முடியும் என்பதையும் உளங் கொள்வாயாக. மேற் கூறப் பெற்ற மல பரிபாகம் பல்வேறு வகைப்பட நிகழுமாதலின் அவற்றிற்கேற்பச் சத்தி நிபாதமும் பல்வேறு வகைப் பட நிகழும் என்று சித்தாந்த நூல்கள் பகரும் அவை மந்ததாம், மந்தம், தீவிரம், தீவிரதரம் எனப் பெரும்பான்மையாக நான்கு வகைப்படுத்திக் கறப் பெறும். ஏனைய பலவற்றையும் மந்த தரத்தில் மந்ததசம், மந்தம், தீவிரம், தீவிரதரம்; மந்தத்தில் மந்ததரம்,மந்தம், தீவிரம், தீவிர தரம் என்றாற்போல ஒவ்வொன்றிலும் நந்நான்காகவும், பின் அவற்றுள்ளும் ஒவ்வொன்றும் நந் நான்காகவும் பலபட விரித்துக் கூறுவர். மந்ததரம் முதலிய நால்வகைச் சத்தி நிபாதத்தால் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன நிகழும்! அவையும் சத்தி நிபாதம் போலவே சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றாற் போல ஒவ்வொன்றும் நந்நான்கு வகையாய், மேலும் அவை நந்நான்கு வகையாய் இங்ங்ணம் அளவின்றி விரிந்து திற்கும். இங்ங்ணம் பலபட விரிந்து நிற்கும் சரியை முதலிய வற்றால் ஆன்மாவின் அறிவு விரிந்து விளங்கி உண்மையை உணருந் தன்மையை அடையும். இறுதியாக அது இறை வனது முற்றும் உணர்தல் முதலிய எண் குணங்களும் தன்னிடத்து விளங்கி நிற்க, தான் சிவமேயாகின்ற பெரு முத்தி நிலையை எய்தும் என்பதை அறிந்து தெளிக. சத்தி நிபாதத்தின் பயனாக நிகழ்வதே தவம். சிவ பெருமானை நோக்கிச் செய்யும் செயல்களே தவமாகும் என்பதை உலங்கொள்க, 'சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு ' என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கையும் சிந்திக்க. 'தவத்தோர்’ எனப்படும் துறவிகளது செயலாகிது கடவுள் வழிபாடே தவம்’ என்பதாகும். என்பதைத் 15. கொன்றை வேந்தன்-8