பக்கம்:சைவமும் தமிழும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சைவ சமய விளக்கு தெளிக. தவம் செய்வது எற்றுக்கு? துன்பத்தை நீக்கிக் கொள்வதற்கும் இன்பத்தைப் பெறுவதற்குமே தவம் செய்கின்றனர். துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகம் பெரிய துன்பம் பிறவித் துன்பம். இதனைப் வள்ளுவப் பெருத்தசை பிறவிப் பெருங் கடல்' என்று பேசுவார். இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய இன்பம் வீடு பேறு எய்துதல்; முத்தி, இன்பம், இந்தப் பிறவித் துன்பத் தைக் கெட்டொழிப்பவனும், முதிதியின்பத்தை, நல்குப வனும், பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் ஒருவனே யாவான். துன்பத்தை ஒட்டுகின்ற காரணத்தால் 'உருத்திரன்’ என்றும், இன்பத்தைத் தருகின்ற காரணம் பற்றியே 'சங்கரன் சம்பு’ என்றும் பெயர்களைப் பெறு. கின்றான் சிவபெருமான் என்பதை மனத்தில் பதித்திடுக. சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவம் வேறு பயன் களையும் தரும்; முத்திக்கு ஏதுவாயும் நிற்கும். இது பற்றியே மெய்கண்டார் இத்தவத்தை இறப்பில் தவம்: என்று கூறுவர். இன்னொரு முக்கிய கருத்தையும் இவ்விடத்தில் விளக்கவேண்டியது இன்றியமையாத தாகின்றது. சிவ பெருமான் ஒருவனே பதி; ஏனை யாவரும் பசுக்கள் என்பதை நீ.நன்கு அறிவாய். அதனால் சிவபெருமானை நோக்கிச் செய்யப்பெறும் நற்செயல்கள் பதிபுண்ணி, உங்கள்’ எனப்படும். இவை சிவபுண்ணியங்கள் எனவழங். குதலும் இயல்பேயாகும். சிவபெருமானைத் தவிர, பிற. கடவுளரை நோக்கிச் செய்யப்பெறும் புண்ணியங்கள் "பசுபுண்ணியங்கள்’ என்று வழங்கப் பெறும். சிவபுண்ணியங் களே அழிவின்றி நின்று நிலைத்து முத்தியைத் தருவன வாகும். பசுபுண்ணியங்கள் அவ்வாறின்றித் தமக்குரிய சில பயன்களைத் தந்து அழிந்துபடும். அவை அழியவே, அவற்றின் பயன்களும் அழிந்தொழியும். அதனால் அவற். றைச் செய்தாரைத் துன்பங்கள் மீளவும் வந்து பற்றும். 16. குறள்-10