பக்கம்:சைவமும் தமிழும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 289 ஆகவே, பசு புண்ணியங்களைச் செய்தல் இவ்வுலக உணளை உண்டு பசிதணிதல் போல்வதாகும். பசித்துண்டு பின்னும் பசிப்பானை பொக்கும்-இசைத்து வருவினையில் இன்பம்" என்பர் மெய் கண்டார். இதனைச் சிந்தித்து உணர்க: மகிழ்க. சிவபுண்ணியங்களோ ஆங்ஙனம் அன்று. உம்பர் உலக உணவாகிய அமுதத்தை உண்டது போல்வன ஆவை. அமுதத்தை உண்டால் அஃது அழிவதில்லை. உண்டார்க்கு அது பசியைப் போக்குதலே யன்றி, நரை திரை மூப்பு சாக்காடு என்பவற்றையும் நீக்கி நீடிய வாழ்வையும் அளிக்கும். இது போன்றனவே சிவ புண்ணியங்கள். அதனால் இவை தம்மைச் செய்தார்க்கு வேண்டுவன வற்றையெல்லாம் நல்கி பின் அந்தமில் இன்பத்து அழி வில் வீட்டையும் தரும். எனவே இவையே மேற் கொள்ளற் பாலன என்பதை அறிந்து தெளிவாயாக. மக்களும் பிற உயிர்களுமாகிய பசுக்களிடத்தில் அன்பும் அருளுங் கொண்டு அவற்றிற்கு நலம் செய்யும் போது அவற்றையே நினைந்து செய்யுங்கால் அவை பசு புண்ணியங்களாகும். இவற்றைச் சிவபிரானை மறந்து செய்யாமல் நினைந்து செய்யுங்கால் இவை சிவ புண்ணியங் களாகும் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. இதனை யும் நீ உளங்கொள்ளுதல் வேண்டும். எல்லாச் சமயங் களும் உயிர்களின் அறிவு நிலைக்கேற்ற படிகளாக இறைவன் திருவுள்ளத்தில் அமைந்தன என்பதே சைவ சமயத்தின் உட்கிடையாகும். துணைகன்மல துய்த்தொழுக் தொண்டர் சொல்லிா பனை மென்முலைப் பார்ப்பதி யோடுடனாகி இணையில்இரும் பூடிை யிடங்கொண்ட ஈசன் 17. சி. ஞா.போ. சூத், 8. அதி. 1. சை. ச. வி.-19