பக்கம்:சைவமும் தமிழும்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 233 பணிகள்’ என்றவுடன் உலகத் தலைவர்கட்கு ஏவ லாளர்கள் புரியும் பணிகளை ஒத்ததன்று இப்பணிகள். காரணம், இறைவன் உலகத் தலைவர்கள்போல் குறை புடையவன் அல்லன்; அவன் வரம்பில் இன்பம் உடையவன்; வேண்டுதல் வேண்டாமை அற்றவன். ஆத்லால் அவனுக்குப் பணியாளர் சிலரோ பலரோ அவன் முன் நின்று பணி புரிந்து குறை நிரப்ப வேண்டிய இன்றியமை யாமை சிறிதும் இல்லை. ஆயினும், அவன் உலகத் தலை வர்கள்போல் சில பணிகளை ஏற்படுத் தி வைத் திருப்பதும், அவற்றை உயிர்கள் புரியுமாறு வலியுறுத்துதலும் அவ்வுயிர் களின் நலங்கருதியே பன்றித் தன்னலம் கருதியன்று என்பதை நன்கு உளங்கொள்வாயாக. செங்கோல் நடத்தும் அரசன் (மக்களாட்சியில் முதல் அமைச்சன்) ஒருவன் நாட்டில் பலவகைப் பணித்துறை களை அமைத்து அவற்றை ஏற்றபெற்றியால் இயற்று வித்துப் பலரையும் செவ்வனே பணி புரியுமாறு வலியுறுத் துதல் குடி மக்களின் நன்மை கருதியதேயன்றி தன் நலம் கருதி :ன்று என்பது உண்மை. அவ்வாறே எல்லாம் வல்ல இறைவன் வலியுறுத்தும் பணியையும் ஒப்பு நோக்கி உணர்ந்து கொள்க. எனினும், அரசன் (முதல் அமைச்சன்) குறையுடையவன். ஆகவே தன் நலத்திற்காகவும் ஆட்சிப் பொறியைப் பயன்படுத்திக் கொள்வான். குடியாட்சி நடைபெறும் நாடுகளில் காணும் அக்கிரமங்கட்கெல்லாம் காரணம் இவனுடைய தன்னலச் செயல்களின் பரிணாமமே யாகும் என்பதை இன்று பாமரனும் அறிந்து கொள்ளு. கின்றான். எனவே, அரசன் (முதல் அமைச்சன்) பணியாகிய எடுத்துக்காட்டினைத் தன் நலம் கருதாது இயற்றுவிக்கும் அளவில் கொண்டு இறைவன் பணியை உளங்கொண்க, உயிர்கள் இயல்பாகவே ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுத் தம் அறிவை இழந்து கிடக்கும் என்பதை நீ நன்கு அறிவாய். இந்நிலையில் உயிர்கள் அந்த ஆணவ மலம் சரிபாகமான நிலைன் அடைந்தாலும் இறைவனது