பக்கம்:சைவமும் தமிழும்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

况磐辱 சைவ சமய விளக்கு துண்ணிய நிலையை அறியும் ஆற்றலை உடையன ஆக மாட்டா. அதனால், முதற்கண் அவனைப் பரு நிலையில் (தூல நிலையில்) பொதுவாக உணர்ந்து, பிறகு நுண்ணிலை யில் சிறப்பாக உணரும். பரு நிலையில் பொதுவாக உணருங்கால் செய்யும் பணிகளே சரியை முதலிய மூன்றும். நான்காவது படியான ஞானம் இறைவனை நுண்ணிலையில் உண்மையாக உணர்ந்து நிற்கும் பணியாகும் என்பதை உணர்க. முதற்கண் தமது இறைவன் நுண்ணிலையை உணர மாட்டாத உயிர்கள் தன்னைப் பருநிலையாக உணர்தற் பொருட்டே, வடிவம் அற்ற தனது உண்மை நிலையி னின்றும் இறங்கி வடிவம் உடையவனாய்ப் பொதுநிலையில் நிற்கின்றான். அந்த வடிவம் உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று வகையினையுடையது என்பதை முன்னரே விளக்கியுள்ளேன். இறைவனது வடிவம் திருமேனி! என்று போற்றப்படும். மூவகைத் திருமேனிகளுள் உருவத் திருமேனிகளைதி தீன்டி வழிபடுதலும் திருமேனிகளின் வழிபாட்டிற்குத் தேவையானவற்றை அகல நின்று செய் தலும் சரியை எனப்படும். உமாமகேசர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராசர் முதலிய வடிவங்களேயன்றி ஆசான் மூர்த்தியும், அடியார்களும் கூட இறைவனது உருவத் திருமேனிகளேயாகும் என்பதை நீ அறிதல் வேண்டும். இத்திருமேனிகள் அனைத்தும் மாகேசுவர மூர்த்தம் என வழங்கப்படும். ஆதலின் மாகேசுவர பூசை அனைத்தும் சரியைத் தொண்டுகளில் அடங்குகின்றன. " திருக்கோயிலில் இலிங்க மூர்த்தி முதலிய அனைத்து மூர்த்திகளையும் வழிபடும் முறைகளும் சரியையில் அடங் கும். திருக்கோயில்களில் மூர்த்திகளை அகல நின்று வழி படுதல், அங்கு நிகழும் வழிபாட்டிற்கு ஆகுமாறு நந்த வனம் வைத்தல், பூக்கொய்து கொடுத்தல், பூமாலை 87. இயல்-2,; கடிதம்-11; பக். (80-82)