பக்கம்:சைவமும் தமிழும்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 驾鹦笠 பூச்சரம் இவற்றைத் தொடுத்துத் தருதல், திருக்கோயில் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், உழவாரப் பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டிய அளவிற்குப் புதுக்கித் திருப்பணி செய்தல், நித்திய தைமித்திக வழி பாடுகளைச் செய்வித்தல், அவற்றிற்குத் தேவைப்படும் குடம், கவசம், தீபக் கால்கள், விசிறி. கண்ணாடி முதலியன ஆக்கித் தருதல், சிவ புராணங்களையும் அடியவரது வரலாறுகளையும் கேட்டல், தீர்த்த யாத்திரை, திருத்தலப் பயணம் முதலியவற்றையே மேற்கொள்ளல் முதலிய இன்னோரன்ன் பலவும் சரியையைச் சார்ந்த திருத் தொண்டுகளாகும். இதனை, தாதமார்க் கம்சாற்றில் சங்கரன்தன் கோயில் தலம் அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப் போதுகளும் கொய்துபூந் தார்மாலை கண்ணி புனிதர்க்குப் பல சமைத்துப் புகழ்ந்து பாடித் தீதில்கிரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் செய்து திரு வேடய்கண் டாங் அடியேன் செய்வது யாதுபணி பீரென்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதில் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர்.: என்று சித்தியார் விளக்கிக் கூறும். அப்பர் பெருமான் இம்முறைக்கு எடுத்துக் காட்டாகின்றார். சுருங்கக் கூறின், புறத் தொழில் அளவில் இறைவனது உருவத் திருமேனியை நோக்கிச் செய்யப்படுவன பலவும் சரியை” யில் அடங்குகின்றன என்று கூறலாம். திருக்கோயிலி லுள்ள இலிங்கம் அருவுருவத் திருமேனியையும் புறத் தொழிலளவில் வழிபடுவதால் அவ்வழிபாடும் சரியையில் அடங்கி விடுகின்றது என்பதையும் உளங்கொள்க. 28. நாட்டுக் هam قوتهت தனவணிகர்கள் இப்பணியில் முன்னணியில் நிற்கின்றனர் என்பது உலகறிந்த உண்மை. 29. சிந்தியார்-8.19