பக்கம்:சைவமும் தமிழும்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சைவ சமய விளக்கு இவ்வழிபாட்டுள் திருக்கோயிலில் திருவலகிடுதல் முதலாயின சரியையில் சரியை எனவும், ஒரு மூர்த்தியை வழி படுதல் சரியையிற் கிரீயை எனவும், வழிபடு கடவுளையும் சிவபெருமானையும் தியானித்தல் சரியையில் யோகம் என வும் கொள்ளப்படுகின்றன. இச் செயல்களால் ஓர் அநுபவம் வாய்க்கப் பெறுதல் சரியையில் ஞானம் ஆகும் என்பதையும் அறிக. - ... ? - - கிரியை இதனை விளக்குவேன். சிவபெருமானின் ஆAவுருவத் திருமேனியாகிய இலிங்க மூர்த்தத்தை அணுகி யிருந்து அதன்கண் அப் பெருமானை மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் பலவகை உபசாரங்களையும் முறைப்படி செய்து வழிபடு தலே கிரியை என்பது. திருமுழுக்கு (அபிடேகம்), ஆடை, அணிகலன், சந்தனம், மலர் முதலியவற்றால் செய்யும் ஒப்பனை (அலங்காரம்), படையல் (நிவேதனம்), புகை, ஒளி (தூபம், தீபம்), குடை, கொடி, கண்ணாடி, கவரி முதலியமங்கலப் பொருள்கள் இவற்றை ஏற்பித்து, வலம் (பிரதட்சினம்) செய்தல், அடிபணிதல் (நமஸ்காரம்). புகழ்ச்சி (தோத்திரம்) என்பவற்றைச் செய்து வேண்டி (பிரார்த்தித்து) நிற்றல் என்னும் இவ்வகை அணுக்கத் தொண்டுகள் கிரியையுள் அடங்கும். சரியை நிலையிலும் திருமுழுக்கு முதலியவற்றைச் செய்யினும் அவை மேற் குறிப்பிட்ட மந்திரம் மூன்றானும் அகத்தும் புறத்தும் நிகழாது, செயலளவில் புறத்து மட்டிலும் நிகழ்தலின் அவை கிரியை எனப்படுதல் இல்லை. இதன்ை மேலும் சற்றுத் தெளிவாக்குவேன். உபாசனை முதலாக வரும் காரியங்களின் தொகுப்பை யுடையது கிரியை என்று கூறலாம். பக்தன் தன்னைப் பரமபதத் தந்தையின் தொண்டுக்காகப் பயபக்தியுடன் கட்டுப்பாடு கடமை உணர்வுள்ள மகனாகக் கருதிப் பணிந்து ஒழுகு கின்றான். ஆகவே, அவன் தன் நேரம் முழுவதையும், இறை வனுக்குப் பணி செய்வதிலேயே கழிக்கின்றான்,