பக்கம்:சைவமும் தமிழும்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 397 நம் கடம்பனைப் பெற்றவன் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடி யேனையும் தாங்குதல் என்கடன்பணி செய்துகி டப்பதே." என்று தனது கடமை இறைபணி செய்வதே என வாழ்தல் முதல் மார்க்கத்தை விட மிகவும் நெருங்கிய அன்புடின் பணிவிடை செய்வதாகும். இம் மார்க்கத்தின் பயனாகக் கடவுளருகில் செல்லலாம். அகந்தையையும் ம.மகாரத்திை யும் தகர்த்தெறிய வல்லது கிரியா மார்க்கமாகும். அருணந்திதேவ நாயனாரும் இதனை, புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போது புகையொளிமஞ் சனமுமது முதல்கொண் டைந்து சுத்திசெய் தாசனமூர்த்தி மூர்த்தி மானாஞ் சோதியையும் பாவத்தா வாகித்துச் சுத்த பத்தியினா லருச்சித்துப் பரவிப் போற்றிப் - பரிவினொடு கெரியில்வரு காரியமும் பண்ணி நித்தலுமிக் கிரியையினை பியற்று வோர்கள் கின்மலன்ற னருகிருப்பர் கினையுங் காலே." என்று விளக்குவர். ஞானசம்பந்தரை இம் முறைக்கு எடுத்துக் காட்டாகக் கொள்வர் சைவப் பெருமக்கள். திருக் கோயில்களில் விளங்கும் இலிங்கத் திருமேனிகள் ஊரும் நாடும் ஆகிய உலகனைத்தின் பொருட்டாகும். ஆகவே, அங்கு பிறர் பொருட்டாகச் (பரார்த்தமாகச்) செய்யப்படும் வழிபாடு நடைபெறும். எனவே, அவரவரும் தம் பொருட்டாக (ஆன்மார்த்தமாக)ச் செய்யவேண்டிய வழிபாட்டினை இல்லத்தில் திகழ்த்தலாம். இம் முறையில் வழிபாடு இயற்றுவோர் ஆசாரியர் வழியே இலிங்கத் திருமேனியைப் பெற்று, அவர்பால் வழிபடும் முறைகளைச் 30. தேவாரம். 5.19:9 31. சித்தியார்-20