பக்கம்:சைவமும் தமிழும்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சைவ சமய விளக்கு செல்வனே அறிந்துகொண்டு, அதன்படியே செய்தல் வேண்டும் என்பது அறியத்தக்கது. மேற்குறிப்பிட்ட இரண்டிடத்தும் பூசைக்குரிய மங்கலப் பொருள்களைத் திரட்டுதல் கிரியையில் சரியை, புறத்தில் பூசித்தல் கிரியையில் கிரியை, அகத்தில் பூசித்தல் கிரியையில் யோகம் என்பவற்றை உளங் கொள்க. இவற்றால் வழி பாட்டாளர் அநுபவம் வாய்க்கப்பெறுதல் கிரியையில் ஞானம் என்பதையும் அறிக. யோகம் இதனைப்பற்றியும் நீ தெரிந்து தெளிதல் இன்றியமையாதது. யோகம்’ என்பது, வடசொல். "கூடுதல் அல்லது ஒன்றுதல் என்பது இதன் பொருளாகும். ஆன்மா இறைவனோடு ஒன்றுதல் அறிவால் அல்லது உடலால் அன்று என்பதை அறிவாயாக. ஆயினும் மனம் முதலிய அந்தக் கரணங்கள் கண், கை, கால் முதலிய புறக் கரணங்கன்போல் ஆன்மாவிற்குப் பெரிதும் தொலை வாகனது, அதனோடு ஒன்றித்து நிற்றலின், அவற்றால் இறைவனைக் கூடுதலும் யோகம்’ என்று உபசரித்துக் கூறப்பெறும். புறத்தே பரந்து சென்று திரிந்து உலகப் பொருள்களோடு ஒன்றியே பழகிவிட்ட இம் மனம் முதலிய அந்தக்கரணங்களை அவற்றின்மேல் செல்லாதவாறு அடக்கி அகத்தே நிறுத்தி இறைவனோடு ஒன்றச் செய்தல் என்பது எளிதான செயலன்று. அதனால் அவ்வாறு செய்வ தற்குப் பல செயல்கள் முதற்கண் வேண்டப்பெறுகின்றன. ஆகவே, யோகம் என்பது எட்டுத் கூறுகளாகப் பகுத்துக் கூறப் பெறுகின்றது." அவை: இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாசனை, தியானம், - சமாதி என்று வழங்கப்பெறும். இவற்றைச் சுருக்கமாக விளக்குவேன். - -- இயமம் என்பது. நூல்களில் விலக்கப்பட்ட தீயொழுக் கங்களை அறவே விலக்குதல். இந் நிலையில் இருப்போர்க்கு 32. டிெ. 8.21