பக்கம்:சைவமும் தமிழும்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 2鹦镑 இல்லக் கிழத்தியோடு இருத்தலும் ஏதமாகும். மனைவி யோடும் மக்களோடும் இருந்தவர்களாகக் குறிப்பிடப் பெறும் முனிவர்கள் வானப்பிரத்தம் என்ற மூன்றாம் நிலை இல் நின்றவர்களேயன்றி முற்றுந் துறந்த சங்கியாசம் என்ற நான்காம் நிலையில் நின்றவர்கள் அல்லர். இவர்கள் யாவரும் தவத்தவர் எனப் பெயர் பெறுபவரேயன்றி யோகியர்' எனப் பெயர்பெறார் என்பதைப் பிரித்து அறிக. நியமம் என்பது, நூல்களில் விதித்தவற்றை இயன்ற அளவில் கடைப் பிடித்தல் ஆகும். நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடிஇச் சோர்தடை தாழச் - சுடரோம்பி-ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி: என்ற வெண்பாவில் குறிப்பிட்டுள்ளவை இந்நியமத்துள் சேர்வனவாகும். இனி, ஆசனம் என்பது, தாமரை (பதுமம்), யாமை (கூர்மம்) முதலிய பெயர்களைப் பெற் றுள்ள இருக்கை வகைகளில் உடலைப் பயிற்றி அவற்றின் படி அமர்தல். பிராணாயாமம் என்பது. இயற்கையாக இயங் கும் மூச்சுக் காற்றினைத் தன் வசப்படுத்தி ஒரு நெறியில் இயங்கச் செய்தல் ஆகும். பிரத்தியாகாரம் என்பது, தான் நினைத்த பொருளின் வடிவாதல். தாரணை என்பது, மனத்தை அடக்கி ஒருவழியில் நிறுத்துதல்; இறைவனுடைய திருமேனியை மனத்தில் கொள்ளுதலுமாம். தியானம் என்பது, இறைவனை அவனது ேே. புறம், வெண். மாலை-வாகைப். 14 34. இயல்-:ே கடிதம்-Aக்; பத்