பக்கம்:சைவமும் தமிழும்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔翰尊 சைவ சம விளக்கு அருவுருவத் திருமேனியாகிய ஒளி வடிவினனாக எண்ணு தல். சமாதி என்பது, அந்த எண்ணத்தில் தன்னை மறந்து அவனோடு ஒன்றி விடுதலாகும், மனம் தாரணைக்கண் நின்ற பின்னர்ச் சிவபெருமானைத் தியானித்தலும், அவனிடத்து அழிந்துதலுமே சிவயோகமாம். இந்நிலை களை அட்டாங்கமோகம் என்று யோக நூல்கன் விரித்துப் பேகம், மேற்கூறியவற்றால் யோகம் என்பது அகத்தொழில் ஒன்றால் மட்டிலும் சிவபெருமானது அருவத்திருமேனியை நோக்கிச் செல்லும் வழி பாடாதல் தெளிவாகும் இந்த எட்டு உறுப்புகளுள் முதல் நான்கும் யோகத்தில் சரியை, ஐந்தாவதும் ஆறாவதும் யோகத் தில் கிரியை தியானம் யோகத்தில் யோகம்; சமாதி யோகத்தில் ஞானம் என்றும் இன்னும் பலவாறாகவும் விரித்து விளக்கப்பெறும். சரியை, கிரியை, யோகம்" என்பவற்றை மேற்கொண்டு ஒழுகும் முறைகள் பலவும் சிவாகமங்களில் சரியாபாதம், சிரியா பாதம், யோகபாதம் என்னும் பகுதி களிலும் அவைபற்றி எழுந்த பிற நூல்களிலும் லகுத்துக் கூறப்பெற்றுள்ளன. யோகம்பற்றிய செய்திகளை :ோக நூல்களில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. விரிவை வேண்டுவோர் அந்நூல்களை நாடி அறிதல் வேண்டும். இவையெல்லாம் தற்சமயம் உனக்குத் தேவையில்லை. சுருங்க கூறின், யோகத்தில் பக்தன் தன்னைக் கடவுளின் பிரிய நண்பனாகக் கருதுகின்றான். புலன் பொருள்களின் தடுமாற்றத்தினின்றும் மனத்தை வெளிப் படுத்தி மிக உயர்ந்த தியானத்தில் ஈடுபட்டுக் கடவுளை வேண்டுவது ஆன்மா. இம்மணர்க்கத்தின் பயனாகச் சாரூபத்தை அடையலாம், அதாவது தெய்விகத் தன்மைகை; அடையலாம். சரியை கிரியை யோகம் ஆகிய மூன்றும் மூத்தியின் முதற்படிகட்டுக்குக் கொண்டு செல்லும். இதுவே பத.