பக்கம்:சைவமும் தமிழும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 30i முத்தியாகும், இது பின்னர் விளக்கப்பெறும். ஆனால் இதன்மூலம் ஆன்மா முழு விடுதலை பெறாது. ஏனெனில், மாயையானது மாயையால் ஏற்பட்ட உலகிற்கு மேலே ஆன்மாவைக் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆகவே, இம் மூன்று மார்க்கங்களும் இறுதி மார்க்கமான ஞான மார்க்கத்திற்கான ஏற்பாடுகளேயாகும். இதனை அடுத்து வரும் கடிதமொன்றில் விளக்குவேன். அன்:ன், + கார்த்திகேயன். &త్తి அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. சிவ புண்ணிய வகைகளை வேறு விதமாகவும் பகுத்துப் பேசுவர். அவற்றையும் நீ அறிந்து கொள்ளுதல் இன்றி யமையாதது. முன் கடிதத்தில் குறிப்பிட்ட இறப்பில் தவங்களாகிய சரியை முதலியன அபுத்தி பூர்வமாகவும், பொதுவாகவும், உண்மையன்றியும் நிகழ்தல் உண்டு. ஒருவன் தான் சிவபுண்ணிகத்தைச் செய்கின்றேன் என்ற உணர்வில்லாமல் செய்யும் சிவபுண்ணியம் அபுத்தி பூர்வ சிவபுண்ணியம்’ எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டு ஒன்று தருவேன். சிவன் கோயில் ஒன்றில் எரிந்து கொண் டிருந்த திருவிளக்கு அணையும் நிலையில் இருந்தது. எலி ஒன்று விளக்கில் உள்ள நெய்யை உண்ணச் சென்றது. விளக்கில் வாய்வைக்கும்போது அது சுட்டது. உடனே வாயை எடுத்தபொழுது விளக்கும் தானாகத் தூண்டப் பட்டு நன்கு எரிந்தது. இதுவே அவ்வெலிக்கு விளக்கிட்ட சிவபுண்ணியமாக அமைந்தது. இதன் பயனாக அதுவே 34. இயல். கடிதம்-44.