பக்கம்:சைவமும் தமிழும்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3辖爱 சைவ சமய விளக்கு மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பது வரலாறு. அபுத்திபூர்வ சிவபுண்ணியமும் பலன் தருகின்றது என்ற உண்மை இதனால் பெறப்படுகின்றது. மக்களிடையேயும் இதுபோன்ற செயல்களைச் செய்பவரும் உளர். அங் காடித் தெருவில் மலர் முதலியன விற்பவர்கட்கு இத்த கைய அபுத் தி பூர்வசிவ புண்ணியம் நிகழ்தல் உண்டு. மலர் விற்றுப் பிழைப்பவர் அதன்பொருட்டு பூந்தோட் உங்களை வைத்துப் பாதுகாத்துப் பூப்பறித்துத் தொடுத்து விற்கின்றனர். இதனைச் சிலர் வாங்கிச் சென்று சிவ பெருமானுக்குச் சாத்தியும், சாத்துவித்தும் வழிபடு இன்றனர். இதனால் பூவிற்றவர்க்கு அவரறியாமலேயே அபுத்தி பூர்வ சிவபுண்ணியம் அவரை வந்தடைகின்றது. விலை கொடுத்து வாங்கப்படும் பூவும் பிறவும் கொண்டு வழிபடுவோர் பொதுச் சிவபுண்ணியம் செய்பவராவர். பூவன்றி தேங்காய், பழம், ஊதுவத்தி, கர்ப்பூரம் முதலிய பிற பொருள்களையும் சிவாலயங்களில் நடை பெறும் பூசனைக்கு உரிய பொருள்களையும் விற்பவர்கட்கும், கூலி. பெற்றுத் திருப்பணி செய்பவர்கட்கும் இவர் போல்வார் பிறர்க்கும் அபுத்தி பூர்வ சிவபுண்ணியங்கள் உண்டாகும் என்பதையும் அறிந்து தெளிக. - மேற்கூறியவாறு போலன்றி அன்பு காரணமாகவே சிவப்பணிக்கு , மேற்குறிப்பிட்டவாறு உதவினாலும் அன்றிச் சிவபெருமானைத் தாமே வழிபடினும், அப் பெருமானின் முழுமுதல் தன்மையை உணராமல் அவனை யும் பிற தேவர்களோடு ஒப்பவைத்து வழிபடினும் அதனால் வரும் சிவ புண்ணியமும் அபுத்தி பூர்வ சிவ புண்ணியமேயாகும். காரணம், 'பதி புண்ணியம் என்பது பசுக்களது தன்மையினையும், பதியினது தன்மையினை யும் வேறு படுத்தி நன்கு உணர்ந்து அவ்வுணர்வு காரண மாகப் பசுக்கள்மாட்டு அன்பு நிகழாது பதியினிடத்து அன்பு நிகழப் பெறுதலேயன்றி உண்மையாக நிகழாமையே என்க. எனினும், இவை முன்னர்க் குறிப்பிட்டவை போலன்றி சிறிது உணர்வு பெற்றுச் செய்யப்படுவதால்