பக்கம்:சைவமும் தமிழும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாதன இயல் 335 றாலும் தத்துவ ஆராய்ச்சி வழியாக இறைவனை அறியும் அறிவே ஞானம் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது." எல்லா வேதங்களும் பண்டைச் சாத்திரங்களும் ஞானத்தையே முத்திக்கு நேரான மார்க்கமாக ஒரே மாதிரி யாகக் கருதுகின்றன. ஞானத்தால வீடென்றே நான்மறைகள் புராணம் கல்ல ஆ கமஞ்சொல்ல அல்லவாம் என்னும் ஊனத்தார் என்கடவர் அஞ்ஞானத்தால் உறுவதுதான் பக்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான் ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் இருள்போல் அஞ்ஞானம் விடப்பம்தம் அறும்.முத்தி யாகும் ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம் - இறைவனடி ஞானமே ஞானம் என்பர்.பி என்று சித்தியார் பேசுவதைக் காண்க. நான்கு வேதங் களும் புராணங்களும் புனித ஆகமங்களும் ஞானமே முத்திக்கு வழி என்று உறுதி கூறுகின்றன. பந்தம் அஞ்ஞன னத்தில் கொண்டு விடுகின்றது. உண்மையான மெய்யறிவு, மெய்ஞ்ஞானம் எழுந்தவுடன் பகலவனைக் கண்ட இருள் போல அஞ்ஞானம் அகன்று மறைகின்றது. அறியாமை அழிந்தவுடன்-பந்தம் போனவுடன்-விளைவது முத்தி யாகும். உண்மையான இந் நிலையை அடைய உதவும் அறிவு பதிஞானம் ஆகும். இதனை இன்னதென்பதை முன்னரே விளக்கியுள்ளேன்.”. இந்த அறிவு இறைவனறிவு ஆன்றி வேறு யாதாக இருக்க முடியும்? - அறிவு யாவும் ஞானமேயாயினும், மெய்ப்பொரு ளாகிய இறைவனை அறியும் அறிவே ஞானம்’ எனப்படுதல் 37. சித்தியார்.8.22, 38. டிெ-27, 39. இயல்.2. கடிதம்-15; பக் (16-117) சை, ச, வி.-20