பக்கம்:சைவமும் தமிழும்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}{; சைவ சமய விளக்கு போன்றது. இது. இறைவனை அறநூல்கள் மெய்ப் பொருள் என்றும், செம்பொருள் என்றும் சிறப்பித்துப் பேசும், அதனால் அறநூல்களில் ஞானம் மெய்யுணர்வு' என்று கூறப்படும். சைவ சமயம் இறைவனைச் 'சிவம்’ என்று கூறுவதால் இச் சமயநூல்கள் இறையுணர்வை 'சிவஞானம்’ என்று பகரும். இவையெல்லாம் தத்துவ ஆராய்ச்சி வழியாக மெய்ப்பொருளை உணர்வதையே குறிக்கும் என்பதை உளங் கொள்வாயாக. ஞானத்தின் மிக்க அறநெறி காட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் கன்றன்று ஞானத்தின் மிக்கவை கன்முத்தி கல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரசின் மிக்காரே." என்ற திருமூலரின் திருவாக்கையும் காண்க. ஞானத்தை விட மேலான மார்க்கம் இல்லை. வேறு எதுவும் முத்திக்குக் கொண்டு செல்லாது. உண்மையான அறிவாகிய ஞானத்தில் திளைத்தவர்கள். உண்மையிலேயே சிறந்தவர்கள் என்பது தெளிவு. சன்மார்க்க சகலகலை புராண வேத சனத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம் பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும் நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான ளுேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம் பன்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப் பெருமையுடை யோர்சிவனைப் பெறுவார். கானே." என்று சித் தியார் கூறுவதும் இதற்கு அரணாக அமை வதையும் கண்டு கொள்க. சன்மார்க்கத்திற்கு மணிவாசகப் பெருமானை எடுத்துக் காட்டாகக் கொள்வர். 40. திருமத்திரம்.ஐந், தந், ஞானம்-1. 41. சித்தியார்.8.22.