பக்கம்:சைவமும் தமிழும்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த இலக்கியங்கள் 327 துறை பாங்கி தலைமகற்குக் குறியிடம் கூறல். பகற்குறியிடத்தே தலைவன் தலைவியைக் கூடுமிடத் தடையாளம் கூறாதிற்றல். அதற்குப்பாடல். அகலி லிருக்குஞ் சுடரென வெங்கை யகத்திருக்கும் புகலி லிருக்கும் பொருளனையார் தம்பொருப் பருகே இகலி லிருக்கும் கதிர்வே லிறைவ விரற்கடும் பகலி லிருக்கும் பொழில்பகல் யாங்கள் பயிலிடமே(133) துறை: குறியுய்த்தகறல்: அதாவது-பாங்கி, குறியிடத்துத் தலைமகளை நிறுத்தித்தான் அகன்று போதல். அதற்குப் பாடல் w காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகையால் தூதாய் நடந்ததிரு வெங்கை வாணர் சுடர்கிரிமேல் போதார் மலர்மல் லிகையோடு முல்லையும் போய்க்கொணர்வேன் பாதார விந்தம் வருந்தா திவண்நிற்க பைங்கொடியே(179) துறை: நற்றாய் தமருக்கு அறத்தொடு நிற்றல். அதாவது-நற்றாயானவள் செவிலி முன்னிலை மொழியால் அறத்தொடு நின்ற செய்தியைத் தமருக்கு வெளிப்படையாய்க் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்: வேலோடு வாளும் பயினமர் கானம் விளங்கிழையைப் * .

  • భ°్య