பக்கம்:சைவமும் தமிழும்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}3 酸弱链器德鲨盖 விளக்கு கொள்ளும் தன்மையற்றவனாக உள்ளான். மருந்து களால் நோய் நீங்கின் பிறகு பசி உண்டாகின்றது. உணவை ஒரு வர் ஆக்கி அளித்த பிறகு அவ்வுணவை உண்டே பசி தனிய வேண்டியவனாகின்றான் அந் நோயாளி. இளங்குழவிகட்குக் குழவிப்பருவம் காரணமாகக் கல்வி கற்கும் நிலை ஏற்படுவதில்லை. குழவி வளர வளா <sgeir astEủg### Garé» (Instimct of curiosity) sáias கற்கும் நிலை வாய்க்கின்றது. கல்வி தானாக இப் பருவத் தில் வந்து விடாது. ஆசிரிகர் ஒருவர் பயிற்றுவித்தலால் தான அக்குழவியிடம் கல்வி வருகின்றது. பிறவியிலேயே ஒருவனுக்குக் கண்ணில்லை. மணி மந்திர ஒளடதங்களால் அவனுக்குக் கண் கிடைக்கின்றது; பொருள்களைக் காணும் நிலை அவனுக்கு வந்து விடு கின்றது. ஆனால் அவனுக்கு காணும் பொருள்களை இன் னவை என்று உணர்த்து கொள்ளும் ஆற்றல் இல்லை. பிறவியிலேயே கண் உடையான் ஒருவன் பொருள்களை அவனுக்கு "இஃது இன்னது, இஃது இன்னது என்று அறி வித்தால்தான் அவனால் பொருள்களை இன்னவை என்று பாகுபாடு செய்து அறிய முடிகின்றது. இவை போலவே, ஆணவ மலம் பரிபாகமாகிச் சத்தி நிபாதம் வருமாயின். தவம்புரியும் நிலையும் வாய்க்குமேயன்றித் தவமும் ஞான மும் கிடைத்துவிட வாய்ப்பு இல்லை. குருவருளால்தான் அவை கிடைக்க வேண்டும். அதற்கு இறைவன் திருவருளும் பொதுவாக தவம் கிரியை’ என்று சொல்லப்படும் என்பதை நீ அறிவாய், சரியை முதலிய மூன்றையும் தரு வோர் கிரியாகுரு என்றும், ஞானத்தை உணர்த்துவோர் "ஞான குரு' என்றும் வழங்கப்பெறுவர். மேன்மேல் நிலையில் உள்ளவர் கீழ் கீழ் நிலையைப் பிறருக்குத் தர வல்லவர் என்பதையும் கீழ் கீழ் நிலையிலுள்ளவர் மேல் மேல் நிலையைத் தரவல்லவராகார் என்பதையும் நீ உணர வேண்டும், இக்காரணத்தால் ஞானகுரு, "ஞானம்,