பக்கம்:சைவமும் தமிழும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器臀榜 சைவ சமய விளக்கு தருவது என்று பொருள்படும், கேடிா என்ற வடமொழிப் பதம் rா.நீக்குதல்; தீ-தருதல்’ என்று பொருள்படுவதை அறிக. இந்தத் திக்கை சமய தீக்கை, விசேட தீக்கை, கிருவான தீக்கை என மூவகைப்படும்.' சமய தீக்கையால் சரியையும்: விசேட திக்கையால் கிரியை, யோகம்’ என்பவையும், திருவான தீக்கையால் ஞானமும் கிடைக்கும் என்பதை அறிக. இவற்றை விளக்குவது இன்றி யமையாத தாகின்றது. சத்தி நியாதத்தின் தன்மைக்கு ஏற்பவே உலகியலில் பற்று நீங்குதலும், மெய்ந்நெறியில் (சிவநெறியில்) மனம் பற்றுதலும் படி முறையில் நிகழும் என்பதை ஏற்கெனவே gಣಿ.೬@ 37ನೆ. அதனை ஈண்டு நினைவு கூர்க, இந்த அடிப்படையில்தான் மூன்று தீக்கைகளும் விளக்கம் அ.ை கின்றன. சமய தீக்கை; சத்தி திபாதத்தின் முதல் நிலை மந்ததரம் என்பதை நீ அறிவாய், இதில் சிவபெருமானது முதன் மையை ஒருவிாறு உணரும் நிலை கூடும். இதனால், சிவ பெருமானது பிறப்பு, மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தைத் (சிவாயநம: என்ற பஞ்சாக்கரத்தை)துாலமாக உணர்த்து கணிக்கும் உரிமையும், சிவாகமங்களை ஒதி உணரும் உரிமையும், அவ் வாகமங்களில் சரியாபாதத்தில் நிற்கும் உரிமையும், மந்த தர சத்தி திபாதர்க்குச் சமய தீக்கையின்வழி அடைய முடியும். வேதத்தை ஒதுவதற்கும் வைதிக ஒழுக்கத்தை மேற்கொள்ளுவதற்கும் உபநயனம் இன்றியமையாதது என்பதை அறிவாய். அதுபோல சிவாகமங்களை ஒதுவதற்கும் சைவ ஒழுக்கத்தை மேற் கொள்வதற்கும் சமய தீக்கை மிகவும் இன்றியமையாதது. உபநயனம் பெறாதவன் வேதியன் ஆகான். அதுபோலவே சமய தீக்கைப் பெறாதவன் சைவன் ஆகான். சைவ சமயி யாகும் உரிமையைத் தருததால் இத் தீக்கை சமய திக்கை” 43. சிவப்பிரகாசம்-9. (உரை)