பக்கம்:சைவமும் தமிழும்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器懿 இசவ சமய விளக்கு தாகின்றது. சரியை முதலிய மூவகைத் தவங்களின் முதிர்ச்சியால் மல பரிபாகம் முற்றியவழி சத்தி நிபாதம் அதிதீவிரமாய் நிகழும். அப்பொழுது பதி பசு பாசம் என்னும் தத்துவங்களின் இயல்பை உள்ளவாறு அறிய வேண்டும் என்ற பெரு விருப்பு எழும். அதாவது நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் ஆர்? நான் வந்த வழி எப்படி? போவது எப்படி? எனக்கு வரும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் யாது? துன்ப நீக்கப்பெற்று இடையறாத இன்பத்தில் வாழும் நிலை இல்லையா? அப்படி உண்டாயின் அதற்கு வழி யாது' என்று இங்ங்ணம் பொருள் இயல்புகள் பலவற்றையும் உள்ளவாறு உணர் வதில் பேரவா நிகழும், நிகழவே, வேண்டுவார் வேண்டு வதே ஈவானாகிய சிவபெருமான் ஞானச் செய்தியால் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவமேயால் நிற்கும் ஞான குருவின் சுத்தான்ம சைதன்னியத்தில் ஆவே சித்து நின்று கிருவாண தீக்கையைச் செய்தருலுவான். தாயுமானவர் இரண்டாம் முறை தம் குருவிடம் பெற்றது இந்தத் தீக்கையையே. அத்துடன் துறவு நிலையையும் ஞானோபதேசத்தையும் பெற்றார் என்பதை அறிவாயாக. சமய விசேட தீக்கைகளில் புறவுடம்பு அகவுடம்புகள் மந்திரங்களால் ஒரளவே தூய்மை அடைந்தன. திருவான தீக்கையில் அத்துவாக்கள்; ஆறனையும் முறைப்படி ஒன்றில் ஒன்றை அடக்கி ' எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் கலையைச் சோதிக்கும். இதனால் ஆறத்துவாக் களையும் பற்றி நிற்கும் சஞ்சித கன்மங்களை முற்றத். துடைத்துவிடும். ஆன்மாவையும் வினைக்கட்டினின்றும் விடுவிக்கும். திருவைந்தெழுத்து முத்தி பஞ்சாக்கரமாக உபதேசிக்கப்பெறும். சிவாகமங்களில் ஞான பரீத்தை உணர்த்தும் முகத்தால் பதிபசுபாசம் என்ற முப்பொருளின் இயல்புகளை நன்குணரும் நிலைமை உண்டாகும். முப் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்வதற்குத் தடையாக இருந்த வினைக்கட்கு ஆணவ மலபரிபாகம்