பக்கம்:சைவமும் தமிழும்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 3 is காரணமாக மெலிவடைந்து ஞானாசிரியன் செய்யும் நிருவான தீக்கையால் அடியோடு அழிந்தமையால், பொருளியல்பு முற்றும் தெளிவாக உள்ளவாறு விளங்கு தலே ஞானமாகும். இந்நிலையில் பொய்யைப் பொய் யென்று கண்டு கழித்து மெய்யை மெய்யென்று உணர்ந்து பற்றும் நிலை தானே உள்தாகும். ஆகவே நிருவான திக்கை தீவிரதர சத்தி கிபாதம் உடையார்க்கு உரியதாய் ஞானத்தைத் தருவதாய் அமைகின்றது என்பதை உணர்ந்து கொள்க. இந்த நிருவாண தீக்கை அதிதீவிரத்தி லும் தீவிரமாய் நிற்போர்க்கு அப்போழுதே முத்தியை அளிக்கும் வகையிலும், ஏனையோர்க்கு உடம்பு நீங்குங் காலத்து முத்தியைக் கொடுக்கும் வகையிலும் செய்யப் படும். இவற்றுள் முன்னது 'சத்தியோ கிர்வானதை" என்றும் பின்னது அசத்தியோ கிர்வானதை’ என்றும் வழங்கப்படும், - இந்தத் திக்கை வகைகளைச் செய்வதில் ஒரு நியதியும் உண்டு. தீக்கை பெறுவோர் தகுதிக்குத் தக்கபடி வேறு வேறு வகையாக தீக்கை செய்யப்படும். இதனால் தீக்கை வகை இரண்டாகின்றன. முதலாவது, அக்கினிகாரியத்தால் செய்வது; இஃது அங்கி தீக்கை என்று பெயர் பெறும். இரண்டாவது, அக்கிணி இல்லாது செய்வது; இஃது அங்க தீக்கை என்று வழங்கப்பெறும். இவற்றை அடுத்து கடிதத்தில் விளக்குவேன். திக்கை பெற்றவர்கள் சிவநெறி ஒழுக்க த்தை மேற் கொள்ளுதல் இன்றியமையாதது என்பதை உளங்கொள் @厝帮”猛霹”莎。 அன்பன், கார்த்திகேயன்,