பக்கம்:சைவமும் தமிழும்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4蒙 அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன், நலனே விளைந்திடுக. தீக்கை பெற்றவர்கள் சிவநெறி ஒழுக்கத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதைச் சென்ற கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டேன் அல்லவா? இவர்கள் ஒழுக வேண்டிய ஒழுக்கம் கித்தியம், கைமித்திகம், காமியம் என்ற மூவகைப்பட்டு நடைபெற வேண்டியவை. கித்தியம் : நாடோறும் காலை, நண்பகல். மாலை மூன்று பொழுதும் நீராடல், திருநீறு கண்டிகை அணிதல், மந்திர நீரைத் தெளித்துக் கொள்ளுதல், மந்திர ஆற்றல் களை நெஞ்சு, முகம், தலை, சி ைக. கை, கால் என்னும் உறுப்புகளில் பதிவித்தல், காற்றினை உள்ளிழுத்து வெளியேற்றி, வெளியிலிருந்து உள்வாங்கி நிரம்புதல் முதலியவற்றால் உடலைத் துய்மை செய்து கொள்ளல் போன்றவை நித்திய கருமங்களாகும். மேலும் திருவைந் தெழுத்தைக் கணித்தல், ஆலயவழிபாடு, அடியார் வழிபாடு இவற்றை மேற்கொள்ளல், அகப்பூசை, புறப் பூசைகளை இயற்றல், தியான சமாதியில் நிற்றல், உபதேச மொழியைச் சிந்தித்தல், தெளிதல், நிட்டையில் அழுந்தல் முதலியவையும் இக் கருமங்களுள் அடங்கும். கைமித்திகம் : வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவற்றுள் ஒன்றினானாதல் பலவற்றானாதல் சிறப்பெய்தும் நாள் அல்லது பொழுதுகளிலும், மற்றும் அம்பிகை, முருகன், தேவர், முனிவர், அடியார், மக்கள். அரசர், அசுரர் முதலியோரும், அஃறிணை உயிர்களும் சிவபெருமானது. திருவருளைப் பெற்றுச் சிறப்பெய்திய நான், பொழுது என்பவற்றிலும் சிவபெருமானைச் சிறப் பாகப் பூசித்தலும், விழா எடுத்தலும் ஆகியனவை நைமித் திக கருமங்களில் அடங்கும். -