பக்கம்:சைவமும் தமிழும்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 認醬器 காமியம் : நாம் கோரும் பயன் கருதிச் செய்யும் வழி பாடுகள் காமிய கருமங்களாகும். நோய் நீக்கம், வாழ்நாள் நீட்டம், மனப்பேறு, மக்கட்பேறு, வெற்றி முதலிய பயன் கருதி அவ்வப்பயனுக்கு ஏற்றவாறு சிவபெருமா னுக்குச் செய்யப்பெறும் சிறப்பு வழிபாடுகளையும் விழாக் களையும் சில பல நாட்கள் செய்தவ இவ்வகைக் கருமங் களுள் அடங்கும். - மேற்கூறியவற்றுள் நிதிதியத்தைத் தவிர ஏனைய இரண்டும் வசதிகள் படைத்தவர்களேயன்றி எல்லோரா லும் இயற்றுதல் முடியாது. ஆகவே, தீக்கை செய்யும் பொழுதே எனைய இரண்டும் அவர் கட்குக் கடனாகாத வாறு நிரப்பியொழித்தல் இன்றியமையாதது. இங்ங்ணம் நிரப்பியொழிக்கும் திக்கை நிரதிகார தீக்கை என வழங்கப் பெறும். நிரப்பாது மூன்றையும் கடனாகவே வைக்கும் திக்கை சாதிகார தீக்கை எனப்படும். இம்மூன்று வகைக் கருமங்களும் தம் பொருட்டாகவும் பிறர் பொருட்டாகவும் செய்யப்படும். இவற்றுள் நித்திய கருமம் நோயாலும் பிற வற்றாலும் அதனைச் செய்ய மாட்டாது இடர்ப்படுவார் பொருட்டுப் பிறரால் செய்யப்படும். ஏனைய இரண்டும் பிறர் பொருட்டுச் செய்யப் பெறுங் கால் அவற்றை விரும்பிய ஒருவர் பொருட்டும், பொதுவாக உலகததின் பொருட்டும் செய்யப்பெறும். ஆசாரிய சுவாமிகள் அனை வராலும் செய்யப்பெறும் கருமங்கள் யாவும் உலக நன்மை பொருட்டேயாகும் என்பதை அறிவாயாக. ஒன்றை ஈண்டு நீ நினைவில் கொள்ளவேண்டும். கைtத்திக, காமிய கருமங்களைப் பிறர் பொருட்டுச் செய்வோர் ஆசாரியர் என்று வழங்கப்படுவர். சிவாச்சாரி யார்கள் அனைவரும் இவ்வகையினரே. ஒன்றையும் பிறர் பொருட்டுச் செய்யும் உரிமையின்றித் தம் பொருட்டுச் 'சித்தி, புத்தி, முத்தி' என்றவற்றை அடைய முயல்பவர் சாதகர்’ என்ற பெயரைப் பெறுகின்றார். இவ்விரு திறத்