பக்கம்:சைவமும் தமிழும்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3巻 சைவ சமய விளக்கு தாருக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுத்தற்குச் செய்யப் பெறும் தீக்கை அபிடேக தீக்கை என்ற பெயரைப் பெறும். இக்கூறிய மூன்றுவகைக் கருமங்களையும் இயற்று வோரும் அவரவர் ஆற்றலுக்கு ஏற்றவாறு பாகுபாடு செய்யப் பெறுகின்றனர். நித்திய கருமத்தோடு நைமித்திக காமிய கருமங்களை யும் கடமையாக இயற்றும் ஆற்றலுடையவர் மக்களுள் உத்தமர் என்று வழங்கப்பெறுவர். அவ்வாற்றலின்றி நித்திய கருமம் மாத்திரமே செய்ய வல்லவர் மத்திமர் எனப்படுவர்; அதுவும் செய்யமாட்டாதார் 'அதமர் என்று கூறப்பெறுவர். இதில் முதல் இருவருமே அங்கிதீக்கைக்கு உரியவர்கள். அதமர் எவ்வகையிலும், அங்கி தீக்தைக்கும் உரியவராகார். அங்க தீக்கையே இவர்கட்கு உரியது. இங்கனம், ஆற்றலும் ஆற்றலற்ற நிலைமகளுமே வருணங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் என்று கருதலாம். மேற்குறிப்பிட்ட உத்தமருள் வேத சிவாகமங்களை நன்றாக ஓதி உணர்ந்து அவற்றில் துவலப்பெற்ற ஒழுக்கங் களை முற்றக் கடைப் பிடித்து ஒழுகவல்லவர்கள் 'உத்த மருள் உத்தமர் ஆவர். வேத சிவாகமங்களை ஒதி உணர்ந்தும் அவற்றில் கூறப்பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கமாட்டாதவர் "உத்தமருள் மத்திமர் ஆவர். வேத சிவாகமங்களை ஓதி உணரவும், அவற்றிற் சொல்லப் பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் மாட்டாமல் நித்திய, நைமித்திக, காமிய கருமங்களை மட்டிலும் செய் வோர் 'உத்தமருள் அதமர் என்று வழங்கப்பெறுவர். இம் மூவரும் சாதிகார தீக்கைக்கு உரியவர்களாவர். இவர் அபிடேகதீட்சை பெற்றவராயின் ஆசாரியரும் சாதகரு மான நிலையினை அடைவர். - - தீக்கையில் உபதேசிக்கப்படும் மந்திரங்கள் பல வற்றுள் பஞ்சாக்கரம் (சிவாயநம: என்பது) எனப்படும் திருவைந்தெழுததே முதன்மையானது. அதனால் அது மூல மந்திரம் என வழங்கப்பெறும். அதற்கு அடுத்த