பக்கம்:சைவமும் தமிழும்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 3 f நிலையில் உள்ளவை சம்மிதா மந்திரங்க்ள்"; இவற்றுள் பதினொரு மந்திரங்கள் அடங்கும். இவற்றுள் ஐந்து பஞ்ச பிரம்ம மந்திரம்’ என்றும் ஆறு ஷடங்க மந்திரம்’ என்றும் வழங்கப்பெறும். மற்றும், கலாமந்திரங்கள் காயத்திரிகள் முதலாகப் பல மந்திரங்களும் அவற்றுக்குரிய பீஜாக்கரங் களும் உள்ளன. . பஞ்சாக்கரம் தூல பாஞ்சக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம் முதலியனவாகப் பிரித்துப் பேசப்பெறும். அவையும் அவ்வப் படிமுறைக் கேற்றவாறு உபதேசிக்கப்பெறும். அவற்றையும் ஞானத்திற்குச் சாதன மாய் உள்ள யோகம் முதலிய மூன்றின் இயல்புகளையும் குருமுகமாக அறிந்தும், சைவாகமங்கள் பத்ததிகள் முதலியவை ஓதியும் உணர்ந்து கொள்ள வேண்டியவை. இங்ங்ணம் இவற்றையெல்லாம் உணர்தற்கு முதற்படியாக நிற்பது சமய தீக்கை செய்யப்பெற்று மந்திராதிகாரத்தைப் பெறுதலாகும். இதன் பின்னரே மற்றவை யாவும் உண்டாகும். தீக்கை பெறுங்கால் மந்திரங்களை உபதேசிப்பதிலும் முறைகள் உள்ளன. அவற்றையும் ஈண்டுக் குறிப்பிடல் பொருத்தமானது. மந்திரங்களைப் பீஜாக்கரத்தைக் கூட்டி உபதேசித்தலும், கூட்டாது உபதேசித்தலும் என இருவகை உண்டு. பீஜாக்கரம் இன்றி உபதேசிக்கும் திக்கை *நிர்ப்பீஜ தீக்கை ஆகும்; பீஜாக்கரத்தோடு உபதேசிக்கும் தீக்கை 'ಕ್ಷég தீக்கை என்று வழங்கப்பெறும். அபிடேக தீக்கையில் சபீஜமேயன்றி, நிர்ப்பீஜம் இல்லை. ஏனைய சமய, விசேட நிருவாண தீக்கைகளே சபீஜம்என்றும், நிர்ப் பீஜம் என்றும் பிரிவுபடும் என்பதையும் அறிக. சாதிகார திக்கை சபீஜமாகவும் நிரதிகார தீக்கை நிர்ப்பிஜமாகவும் செய்யவேண்டும் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன. ஆயினும் நிரதிகார தீக்கையும் சபீஜமாகச் செய்தல் நடைமுறையில் உள்ளது. இதனையும் அறிந்து தெளிக, மேலே குறிப்பிடப்பெற்ற முறைகளையெல்லாம் பின் பற்றிச் செய்யப்பெறுவதே அங்கி தீக்கை ஆகும். அஃது