பக்கம்:சைவமும் தமிழும்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$18 சைவ சமய விளக்கு அழல் ஓம்பிச் செய்வதாகிப் அக்கினி காரியத்துடன் நிறை வேற்றப் பெறுவதால் ஒளத்திரி தீக்கை என்றும் வழங்கப் பெறும். இந்தத் தீக்கை ஞானவதி, கிரியாவதி என்ற இரு வகைகளுள் ஒருவகையாற் செய்யப்பெறும். இதனையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். குண்டம், மண்டலம், வேதிகை, நெய், சுருக்கு, சுருவம் முதலிய அனைத்தையும் மனத்தாற் கருதிக்கொண்டு அவற்றைக் கொண்டு செய்யப் பெறும் கிரியைகளையும் மனத்தி னாலேயே செய்வது ஞானாவதி ஆகும். இது சத்தி தீக்கை என்றும் கூறப் பெறும். மேற் சொல்லிய அனைத்தையும் புறத்தே ஆமைத்துக் கொண்டு கிரியைகளையும் வெளிப்படையாகப் புறத்தே செய்வது கிரியாவதி ஆகும். இது மாந்திரி தீக்கை என்றும் வழங்கப்பெறும். - இனி, அங்கதீக்கைகளையும் விளக்க வேண்டியது இன்றி யமையாததாகின்றது. அங்கியாகிய ஒளத்தரி தீக்கைக்கு அங்கமாகச் சிறந்தெடுத்துக் கூறப்பெறுவன ஆறு. அவை: நயனம், பரிசம், வாசகம், மானதம், சாத்திரம், யோகம் ଈ" . ଈଙ୍କ வாகும். இவற்றையும் தனித்தனியே விளக்குவேன். கயன தீக்கை , ஆசாரியன் ஆங்க நியாச, கரநியாசங் களால் தன்னைச் சிவமாகப் பாவித்துக்கொண்டு அப்பா வனையோடு மாணாக்கனைக் கண்ணால் நோக்கி, ஆந் நோக்கினாலே அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்ப தாகும். இது சட்சு தீக்கை (சட்சு.கண்) என்றும் வழங்கப் பெறும். வேள்விக்குத் துணையாக இருப்பதற்கு இராமலக்குமணர்களை விசுவாமித் திரர் கானகத்திற்கு இட்டுச் செல்லும்போது அவர்கள் ஒரு பாலைவனத்தின் வழியாகச் செல்ல நேரிடுகின்றது. அளவில்லாத ஆற்றலுடையவர் களாயினும் பூவினும் மெல்லியர் வருந்துவர் என்று கருதி அவர்களை நோக்கினார் முனிவர். அவர்கள் முனிவரை. அடிபணிய, அவர் பலை, அதிபலை என்ற இரண்டு விஞ்சை களை உபதேசிக்க, சிறுவர்கள் அவற்றை மனத்தில் சிந்திக்கவே, அவர்கள் பயணம் குளிர்ந்த நீரிலே செல்லு