பக்கம்:சைவமும் தமிழும்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல்

    • - 馨。塑 . #: ; 效 %8 & தலை ஒக்கின்றது.' இஃது, நயண தீட்சையை ஒரு புடை பொக்கும் என்பதாகக் கருதலாம்.

பரிச தீக்கை : ஆசாரியன் தனது வலக்கையைச் சிவன் கையாகப் பாவித்து மாணாக்கனது சென்னிமேல் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல். வாசக திக்கை மந்திரங்களைக் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும் பொருந்துமாறும் மாணாக்கனுக்கு உப தேசிப்பது இது. மானத தீக்கை : ஆசாரியன் தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையால் கொணர்ந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து, மீள அவ்வான்மாவை அவனது உடலில் சேர்த்தல் இத் தீக்கையாகும். .. சாத்திர தீககை , ஆசாரியன் மாணாக்கனைச் சிவாக மங்களையும் திருமுறைகளையும் ஒதுவித்தல் சாத்திர தீக்கையாகும். . யோக தீக்கை : ஆசாரியன் மாணாக்கனைச் சிவ யோகம் பயிலச் செய்தலாகும் இது. o இந்த அங்க தீக்கைகள் ஒளத்திரி தீக்கைக்கு உரிய வர்க்கு அங்கமாகவும், அத்திக்கைக்கு உரியரல்லாதார்க்குத் தனியாகவும் செய்யப்படும். இப்பொழுது இவை சாம்பவ தீக்கை, விஞ்ஞானதீேக்கை என்ற திருநாமங்களைப் பெறும், ஒளரிதிக்கைக் பெறாது அங்கதிக்கைமட்டுமே பெற். றவர் மந்திரங்களைச் சிவாகமும் திருமுறைகளும் ஆகிய நூல் வழியாகவே ஒதுதற்கு உரியவர்; தனியாகக் கணித்தற்கு உரியரல்ல, கள், புலால் உண்டல்களைச் செய் வோர் சிவாகமம் திருமுற்ைகளைத் தவிர ஏனைய நூல் 44. கம்ப. பால, தாடகைவதை. 17. 18. 19.