பக்கம்:சைவமும் தமிழும்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3龙镜 சைவ சமய விளக்கு களையேஓ துதற்கு உரியர். அவற்றில் வரும் திருவைத் தெழுத்து முதலியன ஏனைய எழுத்துகளோடும் சொற்க ளோடும் ஒப்பனவேயன்றி மந்திரங்களாகச் சிறந்து நில்லா என்பதை உளங்கொள்க. இவண் குறிப்பிட்ட நயனம் முதலிய ஆறாகிய சாம்பவ தக்கை, மற்றும் ஒளத்திரி தீக்கை ஆகிய அனைத்து திக்கை களும் நல்லாசிரியர் ஒருவரால் நன் மாணாக்கர்கட்குச் செய்யப்பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் நற்பியன் விளையும், பிறர் செய்தாலும் பெற்றாலும் அவை சடங்கு மாத்திரையாய்ப் போய்விடும். உண்மையான தீக்கைகள் ஆகா. இவற்றுள்ளும் சமய தீக்கையும் விசேட திக்கையும் ஒருவாறு சடங்கு மாத்திரையால் செய்தலும் பெறுதலும் உண்டு. நிர்வாண தீக்கையும் அபிடேக தீக்கையும் உண்மை யால் தான் செய்யப் பெறுதல் வேண்டும்; வெறும் சடங்கு கட்கு இவண் இடமே இல்லை என்பதை அறிக. இன்னொரு குறிப்பையும் நீ ஈண்டு அறிந்து கொள்ளல் வேண்டும். ஆசிரியத் தன்மையை வழங்கும் அபிடேக தக்கை பெறுவதற்கு உரியவர் இல்லறத்தவரே என்று சிவாகமங்கள் கூறும்; துறவிகளாயின் இல்லறத்துக்குச் செல்லாமலே துறந்த விரதியரே உரியர் என்றும் அந்நூல் களில் விதிக்கப்பெற்றுள்ளது. முதலாமவர் மாணாக்கரை உடையாயின் அவர் தரும் பொருள் முதலியவற்றால் மீள வும் சுற்றத் தொடர்பு உடையவராகி விடுவர். இரண்டாம வர் அந்நிலையில் தாழாது நிற்றல் அரிது எனக் கருதலாம். இத்தகைய உறுதி அவரிடம் இல்லை யாவின் அவரை உலகம் ஏற்றுக்கொள்ளாது: மாணாக்கர் களும் அத்தகையோரை நாடிச் செல்லார், அபிடேக திக்கை பெறுபவர் இல்லறத்தவராயின் ஆதிசைவ அந் தனராக இருத்தல் வேண்டும் என்ற ஒரு விதியும் காணப் படுகின்றது. - . . .