பக்கம்:சைவமும் தமிழும்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சைவ சமய விளக்கு கின்றது என்பதை உளங் கொள்க. சிவாகமங்களும் இதனைத்தான் அறுதியிடுகின்றன. கண்ணன் உபமன்யு முனிவரிடம் நிர்வாண தீக்கை பெற்ற வரலாற்றையும், அங்ஙனமே இராமன் அகதிதிய முனிவரிடத்து பெற்ற செய்தியையும் அரிவம்சம், பாரதம் பாத்ம புராணம் முதலிய நூல்களால் அறிய முடிகின்றது. கண்ணன் உமன்னிய முனிவரிடம் பெற்றதை, வாதவன் துவரைக்கிறை யாகிய மாதவன் முடிமேல் அடிவைத்தவன்' என்று சேக்கிழார் பெருமாலும் குறிப்பிடுவர். இவை: யாவும் சகலர்க்கு ஆசாரியன் செய்யும் நிர்வாண தீக்கை பன்றி ஞானம் உண்டாக காட்டாது என்பதற்குச் சான்று களாக அமைகின்றன. ஆயினும், திருத்தொண்டர் புராணம் நுவலும் நாயன் மார்கள் யாவரும் ஆசாரியன்மூலம் நிர்வான தீக்கை பெறாமலே ஞானம் உண்டானதாகத் தெரிகின்றதே இஃது எவ்வாறு? என்று நீ வினவலாம். கூறுவேன்; இவர் கள் யாவரும் முன்னைய பிறப்பிலேயே உபதேசம் பெற்று திட்டையிற் செல்லாது தடையுற்று நின்றவர்கள். அதனால் அடுத்தப் பிறப்பில் அந்த ஞானம் காரணமாகச் சிவபெரு மானிடத்து என்றும் மாறாத இயல்பான மெய்யன்பு பெற்று வீடுபேற்றை யெய்தினர் என்பது சிவாகம நூல் களின் துணியாகும். - பிரளயாகலரும் விஞ்ஞான கலரும் ஞானத்தைப் பெறும் முறைகளையும் விளக்குவது இன்றியமையாததா கின்றது. ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவமல மறைப்பு மிக மென்மையாய் உள்ளது. பக்குவ காலத்தில் இறைவன் அவர்க்கு உயிர்க்குயிராய் உன் நின்றவாறே 46. பேசியபு. திருமலைச் சிறப்பு-சி.1.