பக்கம்:சைவமும் தமிழும்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. சென்ற கடிதங்களில் முத்தியை விரும்புபவர்கள் மேற் கொள்ள வேண்டிய சாதனங்களை விரிவாக விளக்கினேன், அவற்றையெல்லாம் ஈண்டு நினைவுகூர்வாயாக. சாதனங்களால் அடையும் பயன்கள் இரண்டு; ஒன்று. பாச நீக்கம்; மற்றொன்று, சிவப்பேறு; அதாவது, சித்தாந்த சைவமுத்தியை அடைதல், உயிர்கள் அடைய வேண்டிய முடிந்த பயன் வீடுபேறு; இதுவே சிவப்பேறு; முத்தி’ என்றும் வழங்கப்பெறுவதும் இதுவேயாகும். வீடுபேற் றிற்கு நேரே சாதனமாயிருப்பது ஞானம் என்பதை நீ நன்கு தெளிந்திருப்பாய். இந்த ஞானத்திற்குச் சாதனங்களாக உள்ளவை சரியை, கிரியை, யோகம் என்பவை என்பதும்" உனக்குத் தெரியும். சாதனங்களால் அடையப்படும் பயன் சாத்தியம்’ எனப்படும். எனவே, வீடுபேறு சாத்தியமும், ஞானம் சாதனமும், சரியை கிரியை யோகம் ஆகிய மூன்றும் சாதனத்திற்குச் சாதனமும் ஆம் என்பது வெளிவாகின்றதன்றோ? இவற்றையெல்லாம் அவனரு ளால் அவன்தாள் வணங்கி என்பதனால், அவன் அருளின்றி ஒன்றும் நடவாது என்பது உணரப்படும். இதனால் ஒரு வகையில் இறைவனே சாதனமும் ஆகின்றான் என்பதனை யும் தெளிக. முன்னொரு கடிதத்தில் சிவபுண்ணி யங் களைப்பற்றி விளக்கினேன். அல்லவா? அதனையும் ஈண்டு நினைவுகூர்க, சரியை முதலிய மூன்றும் ஞானத்தின் கூறுகளே என்பதையும், அவை, ச. வைணவத்தில் சித்தோபாயம்: என்பது இதுவே, சாத்தி யோபாயம், பக்தி பிரபக்தி நெறிகள். 4. இந்த இயல். கடிதம் -37 பக்.