பக்கம்:சைவமும் தமிழும்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 சைவ சமய விளக்கு விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானக் கீர்ன்கும் அரும்பு,மலர் காய்,கனிபோல் அன்றோ பராமரமே." என்று தாயுமான அடிகளின் திருவாக்காலும் எடுத்துக் காட்டினேன். அதாவது, சரியை-அரும்பு; கிரியை-மலர்; யோகம்-காய்; ஞானம்-கணி என்று அடிகளால் படிகளை விளக்கும் பாங்கு அற்புதமாய் விளக்கம் பெறுகின்ற தன்றோ? . உயிர் வகைகள் வாழ்வு என்னும் பெரும் பயணம் போய்க் கொண்டிருக்கின்றன. அப்பயன் இறைவனை அடை யும்பொழுது பூர்த்தியாகின்றது. இறைவனை அடைதலும் முத்தியடைதலும் உயிர்கட்கும் இயற்கைக்கும் முதற் காரணமாய் இருப்பவன் இறைவன். இவை யாவுக்கும் பிறப்பிடமும் அவனே. இவை யாவற்றிற்கும் புகலிடமும் அவனேயாகின்றான். எனவே, இவை யாவற்றிற்கும் அவர் முதல் ஆகின்றார். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து அநுபூதி நிலையிலுள்ள தாயுமான அடிகள், சித்தாந்த முத்தி முதலே' என்று பகர்வது இரத்தினச் சுருக்கமாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். சித்தாந்த முத்தியே சைவ நூல்கள் கூறும் சித்தாந்த சைவமுத்தி யாகும். வாழ்வின் மேலான நோக்கம் வீடுபேறு பெறுவது. அலையும் மனம் அங்குமிங்கும் உழன்று உலகின் சுகதுக்கங் களையெல்லாம் துய்த்து, மயக்கம் நீங்கி, தான் செய்த தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் மனம் நொத்து வருத்தி, தான் செய்தவற்றை நிவர்த்திக்க முயன்று இறுதியில் 5. தா. பா: பராபரக் கண்ணி. 157 6. டிெ சின்மயாநந்த குரு -1