பக்கம்:சைவமும் தமிழும்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சைவ சமய விளக்கு குறியற் றகண்டா தீதமயக் கோதில் அமுதே கினைக்குறுகிப் பிறிவற் றிருக்க வேண்டாவோ? பேயேற் கினிகீ பேசாயே என்ற பாடலால் இதனை யறியலாம். இக் கருத்தை மேலும் தெளிவாக்குவேன். மலங்கள் நிலையாய் நிற்கின்றன. ஆனால் அவற்றின் தீங்கு செய்யும் தன்மை போய்விடுகின்றது. அப்பொழுது பேரின்பத்தை அநுபவிக்கும் தனிச்சிறப்பினை உணர அவை உதவுகின்றன. அதற்கு முன்னர் ஆணவத்தால் ஏற்பட்ட இன்னல்களும் இத் தெய்விகக் கூட்டுடன் சேர்ந்த அநுபவத்தை மிகவும் வரவேற்கத் தக்கதாகச் செய்து விடுகின்றன. முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள் சுத்தவது போகத்தைத் துய்த்தலணு-மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தை விளைவித்தன்மலம் அன்புடனே கண்டுகொ ளப்பா..? என்று இந்நிலையை விளக்குவர் திருவதிகை மனவாசகங்: கடந்தார். இந்த அதுபவத்தில் ஆன்மா அநுபவம் பொருளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அப்பொழுது சிவத்துடன் அத்துவிதக் கூட்டு அடைவதாகச் சொல்வர். அத்துவிதக் கூட்டு என்பது ஆன்மாவின் நாசத்தைக் குறிக் பிடவில்லை. ஆனால் மாறுபாடும் வரம்பும் உள்ள சீவான்மா தனது சுட்டுணர்வில் நீங்கி முற்றறிவுடைய பரம் பொருளிள் வியாபகத்தில் ஒடுங்கி யொன்றாக நிற்கும் நிலையை அது குறிக்கும். ஆன்மா ஒரே மாதிரி அழிவற்ற தன்மையிலேயே நிற்கும். ஆனால் குறையுடனோ மாசுடனோ அஃது இருப்பதில்லை. தனது எண்ணம் அனைத்தையும் அஃது இறைவனுடன் செலுத்தியுள்ளது: 8. தா. பா. சோல்லரிய-2. 9. உண்மை விளக்கம்-51