பக்கம்:சைவமும் தமிழும்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

路3艺 சைவ சமய விளக்கு தாடலைபோல் கூடியவை தானிழா வேற்றின்பக் கூட யோகமெனக் கொள்.'" என்ற உமாபதி சிவத்தின் அருள் வாக்கையும் காண்க. இறைவனும் ஆன்மாவும் இரண்டறக் கலக்கும் கலப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆன்ம போதமும் கண்ணொளி யும் ஒன்று சேர்ந்து செயற்படுவதைக் குறிப்பிடுவதும் வழக்கமாகும். . இதனை மேலும் தெளிவாக்க முயல்வேன். பதி, மெய், அறிவு, இன்பம்-சச்சிதானந்தம் என்பவற்றையே இயல்பாகவுடைய பெரும்பொருள் என்பதை நீ அறிவாய், பக இதனை அறியுந்தோறும் அதற்கு இன்பம் புதிது புதிதாய் விளையும். விளைவே, அஃது அப் பதியையே மேலும் மேலும் அறிந்து எல்லையின்றி இன்பக் கடலில் திளைத்து நிற்கும். பெத்தகாலத்தில் பதி இருந்தும் அதனது உதவி பாசமே யாய உயிர்க்கு விளங்காமையால், அது இல்லாததே யானதுபோல, முத்தி காலத்தில் பாசம் இருந்தும் அதனது மறைப்பு பதியேயான உயிரிடத்துச் செல்லமாட்டாமையால் அக்கினித் தம்பனத்தால் தடை யுண்ட நெருப்புப்போல அது தன் சக்தி மடங்கி இல்லாத தேயாகும். அதனால் முத்தியிலும் மும்முதலும் உள்ளன என்பது சித்தாந்தத்தின் துணிபு. ஆதலால் 'உயிர்க்கும் இறைவனுக்கும் உள்ள கலப்பினால் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய், ஒரு செயலினிடத்து இருபொருளும் ஒருங்கு செல்லுதலால் உடனாய் நிற்கின்ற, அபேதம். பேதம், பேதாபேதம் என்னும் மூன்றனுள் ஒன்றாகச் சொல்ல வராது, அம் மூன்றும் ஒருங்கு தோன்ற நிற்கும் அத்துவிதத் தொடர்பு ஒரு காலத்தில் புதுவதாய் உண்டா காது என்றும் உள்ளதேயாதலின், அத் தொடர்புபற்றிப் பெத்தத்தில் பதியிடத்திற் செல்லாது. பாசமேதானாப் 10. திருவருட்பயன்-3.4.