பக்கம்:சைவமும் தமிழும்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 333. நின்ற உயிர், முத்தியில் பாசத்தில் செல்லாது, பதியே தானாய் நிற்கும்’ என்பதே சைவசித்தாந்தம் கூறும் முத்தி என்பதை அறிந்து தெளிக. - இம் முத்தியின் இயல்பைச் சித்தாந்த நூல்கள் துவல் வதைச் சிறிது காட்டுவேன். மெய்கண்டார், வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது வெய்யோனை ஆகாத மீன்போல." என்று விளக்குவர். இவர்தம் மாணாக்கராகிய அருணந்தி: சிவாச்சாரியார் பல பாடல்களால் இதனைத் தெளிவாக்கு வார். அவற்றுள், அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து குறியாதே குறித்து, அந்தக் கரணங்க ளோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின் பிறியாத சிவன்றானே பிறிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெலாம் தானாய்த் தோன்றி, நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி கி ைறென்றும் தோன்றிடுவன் கிராதார னாயே..?? இரும்பைக் காந் தம்வலித்தாற் போலியைந்தங் குயிரை எரிஇரும்பைச் செய்வதுபோல் இவனைத் தானாக்கி, அரும்பித்திங் தனத்தைஅனல் அழிப்பதுபோல் மலத்தை அறுத்து, அமலன் அப்பணைந்த உப்பதுபோல் அணைந்து விரும்பிப்பொன் னினைச்குளிகை ஒளிப்பதுபோல் அடக்கி மேளித்துத் தான் எல்லாம். வேதிப்பா னாகிக் கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியைஒத் திருப்பன் அந்த முத்தியினிற் கலந்தே." 11. சி. ஞா. போ. சூத். 5. ஆதி.2. 12. சித்தியார். 8.30 13. )ேடி. 11, 12