பக்கம்:சைவமும் தமிழும்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சைவ சமய விளக்கு என்ற திருப்பாடல்களால் முத்தியின் இயல்பைத் தெளி யலாம். மெய்கண்டாரின் மாணாக்கருள் மற்றொருவராகிய திருவதிகை மனவாசகங் கடந்தார், முத்தி தனை அடைந்தோர் முந்துபழம் போதங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின்-ஒத்த இரதம்மனம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர்என் றோதும் விதி. தத்துவங்களெல்லாம் சகசமாய் ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல்-முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஒதியிடுந் தான். |சகசம்-கூடப் பிறந்தது.1 ஆதவன்றன் சங்கிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதமற கிற்கின்ற பெற்றிபோல்-காதாந்தத்து அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்தின்பக் கண்ணில் அழுக்தியிடுங் காண். சென்றிவன்றான் ஒன்றின் சிவபூ ரணம் சிதையும் அன்றவன்றான் ஒன்றும் எனில் அன்னியமாம் -இன்று இரண்டும். அற்றிநிலை ஏதென்னின் ஆதித்தன் அந்தின்விழிக் குற்றம் அற கின்றதுபோல் கொள்.' என்று விளக்கியுள்ளார். இப் பாடல்களுள் இறுதிபாடலின் கருத்து சிறப்புடையது. அந்தகன் (குருடன்) கண் பெற்ற பின் சூரிய ஒளியைக் காணுதல் அவனுக்குப் புதிது போலத் தோன்றினும், உண்மையில் அவ்வொளி அவன்முன் முன்னரே இருந்ததாதல்போல, பாசப்பற்றினால் பாசமாய் 14. உண்மை விளக்கம்-50, 48,47