பக்கம்:சைவமும் தமிழும்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 335 தின்ற உயிர் அப்பசுத்துவம் நீங்கப்பெற்றபொழுது பதியை அடைந்து நிற்றல் அதற்குப் புதிதுபோலத் தோன்று மாயினும், அவ்வடைவு அதற்கு முன்பே இருந்ததன்றிப் புதிதாய் வந்ததன்று' என்ற கருத்து சிறப்புடையதாய்த் தோன்றுகின்றதன்றோ? மேலும், உமாபதி சிவம் முத்தி நிலைக்குப் பிறர் கூறும் உரைகளை யெல்லாம் மறுத்து, "உயிர் பெத்தத்தில் ஆணவ மலத்தோடு எவ்வாறு, தான் என வேறு தோன்றாது. அதில் அழுந்தி நிற்கின்றதோ அதுபோலவே முத்தியில் சிவத் தோடு தான் என வேறு தோன்றாது. அதனில் அழுந்தி நிற்கும் என்பதே சித்தாந்த முத்தியாம்' என அறுதியிட்டு உரைப்பர். இக் கருத்தினையே தாயுமான அடிகள், ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தானுவினோ டித்துவிதம் சாரும்நாள் எந்நாளோ?* என்று பாடினார். இன்னும் உமாபதி சிவம், ஒன்றாலும் ஒன்றாது; இரண்டாலும் ஓசையெழா தென்றால்,ஒன் றன்றிரண்டு மில்.' என்று மொழிந்தார். மற்றும் அவர், காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் கீத்துண்மை காண்பார்கள் கன்முத்தி காணார்கள்;-காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தன்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாரா தவர்." என்று நயம்பட அருளியிருப்பது அறிந்து உணரத்தக்கது. இதனை விளக்குவேன். 15. சிவப் பிரகாசம்-87 16. தா. பா. எந்நாட்கண்ணி.28 17. திருவருட்பயன்-8: 18. வினா வெண்பா.11