பக்கம்:சைவமும் தமிழும்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சைவ சமய விளக்கு முத்தியில் காண்பான், காட்சி, காட்சிப் பொருள் எனப் பொருள் மூன்றில்லை; காட்சிப் பொருளாஇய. சிவம் ஒன்றே:ளது” என்பாரும் முத்தி நிலையை, உணர்ந்தவர் அல்லர்; முத்தியில் இம்மூன்றும் உள என்பாரும் முத்தி நிலையை உணராதவர்களே யாவர்? என்பது ஈண்டுக் காட்டிய வெண்பாவின் பொருளாகும். "இரண்டுமே பிழையாய்விடின், உண்மைதான் யாது?’ என்னும் வினா எழுதல் இயல்பே. காண்பான் முதலிய மூன்றில் காண்பவனாகிய ஆன்மாவும், காட்சியாகிய, அதனது அறிவும் முத்தியில் இல்லாதொழியுமாயின், முத்தி என்பது ஒருவருக்குப் பெறுதற்கரிய பேறாய் முடியாது பயனற்றதாய் ஒழியும். அதுவற்றி முத்தியிலும் அம். மூன்றும் உள; அவற்றை ஆன்மா அறியுமெனின், ஆன்மா ஒன்றை அறியுங்கால் மற்றொன்றை அறியமாட்டா தாகலின், தன்னையும் தனது அறிவையும் அறியும்பொழுது சிவத்தை அறியாது மறக்கும்; அவ்வாறு மறக்குமாயின் அதற்குச் சிவானந்தம் இல்லையாம். சிவானந்தம் இல்லை. யாகவே முத்தி நிலையும் இல்லாமையாய்விடும். இதனால் ஆன்மா தன்னையும் தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றையே அறிந்து நிற்கும் நிலையே முத்தி நிலையாம். ஆகவே, முத்தி நிலையில் மூன்றில்லை; ஒரு பொருளே உண்டு’ என்பதற்கு, முத்தி நிலையில் மூன்றும் உளவாயி னும், ஆன்மா ஏனை இரண்டை அறியாது சிவம் ஒன்றையே அறிதமது நிற்கும்’ என்பதே கருத்தாகும் என்று அறிந்து கோள்க. காண்பான்; காட்சி, காட்சிப்பொருள்' என்பவை முறையே "ஞாதுரு, ஞானம், ஞேயம்’ என வடமொழியில் கூறப்பெறும். அவற்றை இங்கனமே தமிழில் மொழி பெயர்த்துக் கூறினால் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்று சொல்லலாம். ஞேயப் பொருளாகிய சிவத்தை உணரும் நிலையை விடுத்து, யான்.இதனை அறி கின்றேன்’ என்று ஆன்மா தன்னையும், தனது ஞானத்தை