பக்கம்:சைவமும் தமிழும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 ೩೮೧ ಆAu விளக்கு இதற்கு முன்னரும் சில சித்தாந்த முத்திகள் உளவோ? என்ற ஐயம் நின்பால் எழுந்திருக்கவேண்டும். அந்த ஐயத்தை ஈண்டுப் போக்குவேன். - வேறு முத்திகளும் உள்ளன. அவை அயரமுத்தி, மத முத்தி, சீவன்முத்தி என்பனவாகும். இவற்றுடன் பரமுத்தி யையும் சேர்த்து சித் தாந்த முத்தி கான்கு வகைப்படும் எனத் தெளிக. இனி, இவை ஒவ்வொன்றையும் தெளி வாக்குவேன். அயரமுத்தி : தத்துவங்கள் அனைத்திலும் கீழ்ப்பட்ட பிருதிவி தத்துவமும், பூவுலகிற்கு மேல் உள்ள புவர்லோகம் சுவர்லோகம் முதலிய உலகங்கள் யாவும் புண்ணிய உலகங்கள் என்பதை நீ அறிவாய். இதனால் அவை அனைத்தும் பதவிகள்’ என்னும் பெயருக்கு உரியவை யாகும். ஆயினும் பிரகிருதித் தத்துவத்தைக் கடவாத வரையில் முக்குணமாகிய மயக்கம் நீங்காமையால் சைவ சமயம் அவற்றைப் பந்த உலகம்’ என்பதன்றி முத்தி உலகம்’ எனக் கொள்ளுதல் இல்லை. ஆகவே, மால் அயன் இந்திரன் உள்ளிட்ட தேவர் பதங்களைச் சைவ சமயம் 'முத்தியுலகம்’ எனக் குறிப்பிடுதல் இல்லை என்பதை அறிக. இவண் குறிப்பிட்டவர்கள் மும்மலம் உடைய சகலவர்க்கத்தினர்; வினைவழிப் பிறக்கும் பிறப்பினுள் புணணிய மிகுதியால் தேவராய்ப் பிறந்தோர். இப் புண் ணியம் தீர்நதவுடன் தாம் செய்யும் வினைக்கு ஈடாகப் பிறவிகளிலும செல்லுதற்குரியர். முன்னைய பிறவிகளிலும் இத் தெய்வப்பிறவியிலும் செய்த சிவ புண்ணிய மிகுதி யால் இவர்கள் இருவினை யொப்பும், சத்தி நிபாதமும் உடையவராயின் இப்பிறவியிலேயே ஞானாசிரியரால் ஞானம் பெற்று வீடுபேறு அடைவர்; அல்லது அடுத்த பிறவியில் சிறந்த மக்களாய்ப் பிறந்து அவ்வாறு வீடு பேறடைவர். இவவகையில் மாயோன் கண்ணனாய்ப் பிறந்திருந்த ஈாலத்தில் உப மன்னிய முனிவரால் ஞானம் பெற்ற வரலாறு கூறப்பெறுகின்றது. இதனால்