பக்கம்:சைவமும் தமிழும்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 器鹰臂 மாயோன் முதலிய சகல வருக்கத்தினர் வாழும் பதங்கள் எல்லாம் முத்தியுலகங்கள் அல்ல. எனினும்,சகலருக்கு மேற் பட்ட பிரளயாகவர், விஞ்ஞான கலர் என்பவர் வாழும் உலகங்களே முத்தியுலகங்களாகும் என்பதை அறிந்து தெளிக. ஏனெனில், பிரளயாகலர் முக்குணங்களின் நீங் கினவராதலாலும், விஞ்ஞான கலர் விருப்பு வெறுப்புக் கள் நீங்கினவராதலாலும் அவர் கள் வாழும் உலகங்களில் அவை இல்லாமையால் என்க. இனி, குணிருத்திரர் சகல வருக்கத்தினராயினும் சிவ புண்ணியத்தால் சிவனை உணர்ந்து அவனது உருவும், பெயரும், தொழிலும் பெற்றமையால் அவரது உலகமும் முத்தியுலகம் எனப் படும் என்பதையும் அறிந்து தெளிக, பிரகிருதிவரையில் உள்ள தத்துவங்களில் உள்ள பதவி கட்கு மால், அயன், இந்திரன் முதலியோர் புண்ணிய மிகுதியால் தலைவர்களாய் இருப்பர். பிரகிருதிக்கு மேற் பட்ட தத்துவத்தில் உள்ள பதவிகட்குச் சிவ புண்ணிய மேலீட்டால் பக்குவமுற்றுச் சிவஞானத்தைப் பெற்ற சீகண்ட உருத்திரர், அனந்ததேவர், மந்திர மகேசுரர், அணு சதாசிவர் என்போர் தலைவர்களாய்த் திகழ்வர். இவர்களுள் சீகண்ட உருத்திரர் ஒருவர் மாத்திரம் பிரள யாகலருள் பக்குவம் பெற்றுச் சிவஞானம் கைவரப்பெற் றவர். ஏனையோர் விஞ்ஞானகலருள் பக்குவம் பெற்றுச் சிவஞானம் பெற்றவர்கள். இவர்கள் சிவஞானத்தால் மலம் நீங்கப் பெற்றாலும், மலவாசனை நீங்கப்பெறாமை யால் அதிகாரத்திலும் போகத்திலும் சிறிதே இச்சை யுடையராயிருப்பர். இதன்ால் இவர்கள் மேற்கூறிய தலைமையைப் பெற்று புவன பதிகளாய் விளங்குவர். ஞானத்தால் பெற்ற உரிமை காரணமாக இவரெல்லாம் தடத்த சிவனோடொத்து உருவும் பெயரும், தொழிலும் உடையராயினும், ஆன்ம வருக்கத்துட் பட்டவர்களே யாவர் என்பதை அறிக. ஆன்ம வருக்கத்துட்பட்ட வராய் இந்நிலைகளைப் பெற்றவர்களே அணுபட்சதி