பக்கம்:சைவமும் தமிழும்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ சைவ சமய விளக்கு தினர்’ என்று வழங்கப்படுதலையும், பரமசிவன் தடத்த நிலையில் கொள்ளும் சதாசிவன், மகேசுவரன், வித்தியே அரன், உருத்திரன், மால் அயன் என்னும் நினைகள் சம்புபட்சம் என்று வழங்கப்பெறுதலையும் நீ நன்கு அறிவாய், அனுபட்சத்தினர் தம்தம் அதிகார எல்லைக்கு உட்பட்டு வாழும் ஆன்மகோடிகட்குப் படைத் தல் முதலிய ஐந்தொழில்களையும் செய்வர். இவற்றுள் அருளலை ஆசான் மூர்த்தியாய் உடனிருந்தே செய்வர். விரையத் தோன்றி மறையும் அருட்டிரு மேனியாலும், உயிர்க் குயிராய் உள் நின்று உணர்த்துதலாலும் குறைவின்றி நிரம்பிய ஞானத்தை அருளுபவன் பரமசிவன் ஒரு ஆனே என்பதிை அறிந்து தெளிக. இப் பரமசிவனோடு இரண்டறக் கலக்கும் நிலையாக மேற் கூறப்பெற்ற முத்தியே பரழுத்தி என்பதை முன் கடிதத்தில் விளக்கியதை ஈ:ண்டு நினைவுகூர்க. அஃதல்லாது அணு சதாசிவர், மத்திர மகேசுவரஅேனந்ததேவர் என்பவரது உலகங்களை அடைந்து நிற்றல் அயர முத்தியாம் என்பதை அறிந்து தெளிக, இவரெல்லாம் சுத்தமாயையில் தோன்றிய சுத்த தத்துவ புவனங்களில் வாழ்பவர் என்பதை ஏற்கெனவே விளக்கியுள்ளதை ஈண்டு நினைவுகூர்க, ஆகவே, சுத்த தத்துவ புவனங்களே அபரமுத்தி தானங்கள் என்பது தெளிவாகும். - பதமுத்தி : இனி, பத முத்தி இன்னதென்பதை விளக்குவேன். வித்தியா தத்துவங்கள் ஏழிலும் உள்ள சீகண்ட புவனம் முதலிய உருத்திர உலகங்கனை அடைதல் பதமுத்தியாம். குனருத்திரர் உலகத்தை அடைதலும் ஒரு வகைப் பதமுத்தியேயாகும் என்பதையும் அறிக. இவ்வுருத்திர உலகமும் ஒரோவழி சிவலோகம்’ என்று வழங்கப்படும் என்பதை முன்னரே விளக்கியுள்ளதை ஈண்டு நினைவுகூர்க. அபரமுத்தி பதமுத்திகள் முடிந்த முத்தியல்லது, அபரமுத்தித்தானங்களும் பதமுத்தித் தானங்களும் பல