பக்கம்:சைவமும் தமிழும்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

漫4息 சைவ சமய விளக்கு பான்மை. பெரும் பான்மையும் அவர்கள் மீளவும் ஞானம் பெறுவதற்கு வாய்ப்பான நல்ல சூழ்நிலையிற் பிறந்து தவத்தை முற்றச் செய்து ஆசான் மூர்த்தி அருளால் ஞானத்தைப் பெற்றுப் பின் அபரபர முத்திகளை அடைவர் என்பதை அறிந்து கொள்க. நிவிர்த்திகலை பிரதிட்டா கலையுட்பெறும் பதமுத்தியாளர்க்கே சீகண்ட உருத்திரர் பதியாய் நிற்பர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். அதனை ஈண்டு நினைவுகூர் க. மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ் கீழ் உள்ள தத்து வங்களிலும் வியாபகமாதலின் நிவிர்த்தி பிரதிட்டை என்னும் கலைகளிலும் பதமுத்தி அபரமுத்தித் தானங்கள் உளவாதலும் அறிந்து கொள்க, இவ்விடத்தில் சிவ குமாரர்கள்’ எனப்படுவோரைப் பற்றியும் குறிப்பிடுதல் பொருத்தமாகும். இவர்கள் விநாயகக் கடவுள் முருகக் கடவுள், வயிரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள் என்பவராவர். இவர்களும் நிவிர்த்தி பிரதிட்டாகலைகளில் பதச் சாயுச்சம் பெற்றவர்களாவர்: அதனால் இவர்களை வழிபடுவோர் இவர்பால் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர் என்பதையும் அறிக. பத முத்திகளில் சாயுச்சம் பெற்றோரை அபரமுத்தர்' என வழங்குதலும் உண்டு. இவர்கள் தம் விருப்பத்தின் வழியும் புவணபதிகளின் விருப்பத்தின்வழியும் பலவகையான உருவங்களையும் பெற்றிருப்பர் என்பதையும் அறிக. உண்மைச் சரியை முதலியவற்றிற்கு ஞானமும் ஞானத் திற்சரியை முதலியவற்றிற்கு ஞானத்தில் ஞானமுமே உண்மைப் பயனாயினும் இவை இனட நிலைப் பயனாக முறையே பதமுத்தியையும் அபர முத்தியையும் தரும் என் பதையும் அறிந்து தெளிக. இத்துடன் இக்கடிதத்தை திறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேய்ன்,