பக்கம்:சைவமும் தமிழும்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奇5 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலம். நலமேயாகுக. முன் கடிதத்தில் 'சீவன் முத்தி’ பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அதுபற்றி இக் கடிதத்தில் விளக்குவேன், ஞானத்தில் ஞானமாகிய நிட்டையின் பயனாக அடை யப்படும் பரமுத்தி - அதாவது சாயுச்சம் - என்னும் நிலையை இவ்வுலகில் இவ் அடம்போடு கூடியிருக்கும் நிலை யில் பெற்றிருத்தண்ைணியவே சீவன் முத்தி என வழங்குவர். இஃது ஒர் அதீத நிலையாகும். இந் நிலையைப் பெற்ற சீவன் முத்தர்க்குச் சஞ்சித வினை நிர்வாண தீக் கையால் கெட்டொழிந்து, ஆகாமியம் இறைவனது அருள் ஒளியால் ஏறாததாயிற்று. ஆகவே, உள்ளது. எடுத்த உடம்பு முகந்து கொண்ட பிராரத்த வினை ஒன்றேயாகும். இஃது உள்ள துணையும் இவர்கள் ஏனையோர் போல உண்டு உடுத்து பூசி முடித்து நலந் தீங்குகளை எய்தி நிற்பினும், தாமரை இலைத் தண்ணிர் போலச் சிறிதும் பற்றின்றிச் சலியாதே நிற்பர். பிராரத்தம் உள்ளவரையில் உடம்பு நீங்காது நிற்கும் என்பதை நீ நன்கு அறிவாய். ஆயினும், அஃது உடலளவாய் நின்று ஒழியுமேயன்றி, உயிரைத் தாக்கி, உலகத்தோடு தொடர்புபடுத்துதல் இல்லை. ஆகவே, சீவன் முத்தி நிலையை அடைந்தோர் எஞ்ஞான்றும் இறை நினை வில் அழுந்தி, இறைவனோடு தொடர்புற்று நிற்றலன்றி, உலகத்தோடு தொடர்புற்று நிற்றல் இல்லை. இந் நிலை தான் கிட்டை நிலை என்று வழங்கப் பெறுகின்றது. இந்த திட்டையில் இவர்களை ஞாயிறு எங்கெழில் ஏன்? வானம் துளங்கில் என்றார்; மண் கம்பம் ஆகில் என்?" என்று கவலையற்றிருப்பர். இவர்கள் யார்க்கும் 33. தேவாரம்-6.95:ே 34. டிெ, 6.98: