பக்கம்:சைவமும் தமிழும்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 35 என்ற பாசுரத்தில் திருவிடைமருதுரர் இறைவனை இனிய னாகக் காட்டித் தம் அநுபவத்தைப் பெற வைப்பர். இன்னோர் உண்மையினையும் ஈண்டு நீ அறிந்து கொள்ளல் வேண்டும். உடம்பு காரணமாக வரும் பசி முதலியவை காரணமாக இவர்களது அறிவு புறத்தே வருதல் எவையேனும் சில நேரமேயன்றிப் பிறர் போல் எப்பொழுதும் அன்று என்பதை நீ உளங்கொள்ளல் வேண்டும். இந் நிலையில் இவர்கள் சுவையான உணவு களையும் நல்ல பாங்கான உறைவிடங்களையும் தேடிச் செல்வார். மாறாக, இயல்பாகக் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, சருகு, நீர், காற்று முதலியவற்றையே உண்டு பொதுவிடங்களிலும், புறத்திண்ணைகளிலும், மர நிழல் களிலுமே தங்குவர். அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்யார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி யுடன் கிடந்தாற் புரட்டாள்" என்ற அப்பர் பெருமானின் திரும்பாடலால் இவர்கள் நிலையை அறியலாம். அன்பும் அறனும் உடைய பிறரால் கொடுக்கப் பெறின், அதனை சிவனருள் என்று எண்ணி மறுக்காமல் கொள்வர். 'சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்’ என்பதில் சிறிதும் வழுவாதவன் இறைவன் அன்றோ? ஆதலின், அவன் இச் சீரடியார்க்கு வேண்டத்தக்கதை அறிந்து லேண்டும்பொழுது கிடைக்குமாறு செய்து நிற்பான். மணிவாசகப் பெருமானின், வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்t வேண்டி யென்னைப் பணிகொண்டாய் 3 ), டிெ 8.9:ே2