பக்கம்:சைவமும் தமிழும்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சைவ சமய விளக்கு வேண்டி யோ தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் துண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே." என்ற மணிவாக்கால் இதனை யறியலாம். ஆயினும், இந்த அடியார்கள் இறைவன் கொடுப்பான்’ என்று எதிர்நோக்கு தலும் இல்லை. ஆயினும், அவன் தானே முன்வந்து இவர் கட்கு அவற்றைக் கிடைக்கச் செய்வான். அப்பர் சுந்தரர் இருவர்க்கும் இறைவன் கட்டமுது கொணர்ந்து கொடுத்த தும், சுந்தரர்க்கு இரந்து வந்து சோறிட்டதும், ஞான சம்பந்தருக்கு முத்துச் சிவிகை முத்துப் பல்லக்கு, முத்துச் குடை முதலியவற்றைத் தானே கொடுத்ததும், திருவிழி மிழலையில் சம்பந்தர், நாவுக்கரசர் இருவர்க்கும் நாள் தோறும் படிக்காசு அருளியதுமான நிகழ்ச்சிகள் இதற்குக் சான்றுகளாக அமைகின்றன. இங்ங்ணம் இவர்கள் கவலை யற்றிருப்பதால் இவர்களது செயல் சில சமயம் இளஞ் சிறார்களது செயல் போலவும், பித்துக் கொண்டவர் செயல் போலவும், களிப்பு மிகுதியால் ஆடுதல் பாடுதல் முதலியன வாகவும் நிகழலாம். உலகில் இவர்கட்கு எவ்வகைப் பற்றும் இல்லாமையால் உலகியல்பற்றிய விருப்போ வெறுப்போ இவர்களிடம் தலைக் காட்டாது. உடம்புபற்றிய அச்சமும் இவர்கட்கு இல்லை. அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை." நாமர்க்குக் குடியல்லேiம்; மன்ன அஞ்ச்ோம்: கரகத்தில் இடர்படோம் 39. திருவா. குலத்து பத்து 6. 40. தேவாசம்.