பக்கம்:சைவமும் தமிழும்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 காமார்க்கும் குடியல்லோம்; கமனைஅஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம் கடலைஇல்லோம்: ஏகாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்; இன்பமே பெங்காளும் துன்பம் இல்லை." வானங் துளங்கிலென்? மனகம்ப மாகில் என்? மால் வரையும் தானங் துளங்கித் தலைதடு மாறில்என்? தண்கடலும் மீனம் படில்என்? விரிசுடர் விழில் என்? வேலைநஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே,' என்ற அப்பர் திருமொழிகளை ஆழ்ந்து நோக்கின் இது நன்கு புலனாகும். ஆகவே, உலகியல்பற்றிய விருப்பு வெறுப்பு இவர்கட்கு உண்டாதல் இல்லை. ஆயினும், எவையேனும் சில விருப்பச் செயல்கள் நிகழ்வதாயின், அதுவே இறைவன் உயிர்களை உய்விக்க வேண்டி எழுத் தருளியிருக்கும் திருக்கோயில் கட்குச் சென்று வணங்குதல், அவற்றிற்கு ஆவனவற்றைச் செய்தல், மெய்யடியார்களுடன் கூடி இறைவனது புகழ் பாடி இன்புறுதல்-இவை யெல்லாம் இவர்கள் தம்மியல்பில் செய்யினும், இவை உலகிற்கு நலந் தருவனவாய் அமையும். தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா முதலிய தோத்திரப் பாடல்கள் இவ்வாறு எழுந்தனவேயாகும். இனி, தாம் பெற்ற இன்பத்தை உலகனைத்தும் பெற வேண்டும் என்னும் கருணையும் ஒவ்வொரு சமயத்தில் இவர்களது உள்ளத்தில் எழுவதுண்டு. 'யான்வெற்ற இன்பம் 41. டிே. 8, 98 ! 42. டிெ கீ. 112:8 சை. ச. வி.-23